Kathir News
Begin typing your search above and press return to search.

கூகுள் CEO பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் !

கூகுள் CEO சுந்தர் பிச்சை அவர்கள் பகிர்ந்து வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கூகுள் CEO பகிர்ந்த வீடியோ  சமூக வலைத்தளத்தில் வைரல் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Sep 2021 1:18 PM GMT

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளாட்ஸ் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஏரிப் பகுதியில் அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, நீருக்குள் முதலை இருப்பதைக் கண்ட அவர்கள், டிரோன் மூலம் அதனை வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள் அனுப்பிய ட்ரோனாது, கரைக்கு அருகாமையில் நீரில் இருந்த முதலைக்கு அருகில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளது. ஒருவித ஒலியுடன் நீண்ட நேரம் டிரோன் அருகில் இருந்ததால், முதலை திடீரென அந்த டிரோவை கவ்வி விழுங்கியது.




மேலும் அந்த டிரோவை முதலை உணவு என நினைத்தா? என தெரியவில்லை. அந்த ட்ரோனை கவ்விய சிறிது நேரத்தில் முதலையின் வாயில் இருந்து புகை வெளியேறியது. கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், முதலை டிரோன் கேமராவை கவ்வியதை மற்றொரு கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோவை கூகுள் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கிறிஸ் ஆண்டர்சன் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவை சுந்தர் பிச்சை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.


இருந்தாலும் முதலையின் வாயில் டிரோன் வெடித்த இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் தங்களின் வரம்புகளை மீறி செயல்படுவதால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என விலங்குகள் நல ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Input:https://www.ndtv.com/offbeat/watch-alligator-eats-drone-in-video-shared-by-sundar-pichai-2525690

Image courtesy:NDTV news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News