அரசு பள்ளி மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த அவலம்: தலைமை ஆசிரியரின் உத்தரவினால் செய்தார்களா?
அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்.
By : Bharathi Latha
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்து இருக்கிறது அரசு பள்ளி. இங்கு படிக்கும் பட்டியலிட மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கட்டளையிட்டு இருக்கிறார். எனவே பட்டியலில் மாணவர்கள் என்று அடிப்படையில் அவர்களை கழிவறை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் சொன்னதன் பெயரில் அந்த மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்து இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக வருகிறது. மேலும் பள்ளி சீருடைகள் அந்த மாணவர்கள் இங்கு செயல்களை செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் கொடுத்த புகாரின்பேரில் தற்பொழுது ஆர்.டி.ஓ நேரடியாக இந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது. குறிப்பாக விசாரணையில் தலைமை ஆசிரியர் தான் இந்த செயலுக்கு காரணம் என்று தெரியவந்து இருக்கிறது. தலைமை ஆசிரியர் பட்டியலின மாணவர்களை பள்ளியின் கழிவறையில் சுத்தம் செய்ய கட்டளையிட்டு இருக்கிறார். அதன் பெயரில் மாணவர்கள் இந்த செயல்களை செய்தார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக தலைமை ஆசிரியர் மீது விரைவில் நடபடிக்கு எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாட்சியர் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக பள்ளி கல்வித்துறையில் நடைபெற்ற வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வகுப்பறை மற்றும் வளாகங்களை சுத்தம் செய்து சொல்வது முதல் தற்போது கழிவறை சுத்தம் செய்வது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து இருக்கிறதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Input & Image courtesy: J News