பாழடைந்த கோவில்.. அறநிலையத் துறை செய்ய வேண்டியதை செய்த இந்து முன்னணி..
400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பாழடைந்த கோவிலை கிராம மக்களுடன் இணைந்து இந்து முன்னணி செய்த உழவாரப்பணி.
By : Bharathi Latha
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களில் முக்கவாசி தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை குறிப்பாக கோவில் சொத்துக்களின் நிதி தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. ஆனால் கோவில் நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்களில் சற்று பின்னடைவாக தான் செயல்படுகிறது. கோவில்களில் வரும் வருமானம் மூலமாக கோவில்களுக்கு மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.
400 - ஆண்டுகள் பழமை வாய்ந்த, அருள்மிகு சுயம்புநாத சுவாமி உடனுறை சம்பூர்ணவர்த்தினி திருக்கோவில் பராமரிப்பின்றி பாழடைந்த பக்தர்களின் வழிபாட்டிற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதை அறிந்த இந்து முன்னணி மற்றும் சிவனடியார் பெருமக்கள் வாழ்க்கை கிராம மக்களோடு இணைந்து மாபெரும் உழவாரப்பணி… pic.twitter.com/QbuTrsfKn2
— Hindu Munnani (@hindumunnani_tn) June 12, 2023
ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக கோவில்களின் சொத்துக்கள் மூலமாக எவ்வளவு நன்மைகளை பெறலாமோ அவ்வளவு நன்மைகளை பெறுகிறது. ஆனால் கோவில்கள் நலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்களிலும் தாமதித்து வருகிறதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக பழமையான கோவில்கள் மீட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கும் கோவில்களை சரிவர பராமரிக்க வேண்டிய பணிகளை இந்து சமய அறநிலைத்துறை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
இந்நிலையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அருள்மிகு சுயம்புநாத சுவாமி உடனுறை சம்பூர்ணவர்த்தினி திருக்கோவில் பராமரிப்பின்றி பாழடைந்த பக்தர்களின் வழிபாட்டிற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதை அறிந்த இந்து முன்னணி மற்றும் சிவனடியார் பெருமக்கள் வாழ்க்கை கிராம மக்களோடு இணைந்து மாபெரும் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 75 பேர் கலந்து கொண்டனர் .
Input & Image courtesy: News