Kathir News
Begin typing your search above and press return to search.

ஹைதராபாத்தில் 42 அடி உயர துர்கா தேவி சிலையின் புகைப்படங்கள் வைரல்!

ஹைதரபாத்தில் அமைந்துள்ள 42 அடி உயர துர்கா தேவி சிலை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்.

ஹைதராபாத்தில் 42 அடி உயர துர்கா தேவி சிலையின் புகைப்படங்கள் வைரல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Oct 2021 1:25 PM GMT

இன்றைய தினம் இந்தியா முழுவதும் மக்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். நவராத்திரியின் 10வது நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் 45 அடி உயர துர்கா தேவி சிலையை நிறுவியிருக்கிறார்கள். இந்த சிலையானது ஹைதராபாத்தின் எஸாமியா பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சிலையினை அங்குள்ள இந்து மக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைத்த குலாப் ஸ்ரீனிவாஸ் அவர்கள் கூறுகையில், "துர்கா தேவியின் சிலை உருவாக்க 35 நாட்கள் ஆனது. இதற்கு 22 கலைஞர்கள் தேவைப்பட்டன. சுற்று சூழலுக்கு எந்த தீங்கும் இல்லாமல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் சுற்றுச்சூழலுக்கு பொருந்தாத ரசாயனம் மற்றும் நச்சு பொருள்கள் மூலம் சிலைகள் பெரும்பாலும் உருவாக்குகின்றனர். அதனால் தான் இந்த சிலையை சுற்றுசூழலுக்கு தீங்கு வராமல் உருவாக்கி உள்ளோம்.


களிமண், சிவப்பு மணல் மற்றும் பெயிண்ட் ஆகியவற்றில் மூலம் உருவாக்க பட்டிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். துர்கா தேவி ஒன்பது முகங்களும், ஒன்பது ஜோடி கைகளை கொண்டிருக்கிறது. நவராத்திரியின் போது மக்கள் அனைவரும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுகிறார்கள். தசரா ராசி என்பது மகிஷாசுரனை கொன்ற துர்கா தேவியின் வெற்றியைக் குறிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள பக்தர்கள் நவராத்திரியின் போது துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களை வழிபடுவதற்காக உருவாக்குகிறார்கள். ஷைலபுத்திரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகபுரி மற்றும் சித்திதாத்ரி ஆகியவை துர்கையின் ஒன்பது வடிவங்கள் ஆகும்.


மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப துர்கா தேவியின் சிலைகளை உருவாக்கி கொண்டாடுகின்றனர். விஜயதசமி தசரா என்று அழைக்கப்படுகிறது. இது ராமனின் கைகளில் உள்ள ராவணனின் 10 தலைகளைக் இருக்கும். இந்நாளில் ராவணனின் தோல்வியை கொண்டாடுகிறார்கள். விஜயதசமியில் தான் ராமன் அம்பு எய்து ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரை கொன்றதாக புராணங்கள் தெரிவிக்கிறது. இந்நாளில் வட இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் ராமனுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள்.

Input & Image courtesy: News18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News