Kathir News
Begin typing your search above and press return to search.

'நான் கரையை சேர்ந்துட்டேன்..நீங்க?' சுமந்த் ராமனிடம் ட்விட்டர் 'பளார்' வாங்கிய தி.மு.க MP!

'நான் கரையை சேர்ந்துட்டேன்..நீங்க?' சுமந்த் ராமனிடம் ட்விட்டர் 'பளார்' வாங்கிய தி.மு.க MP!

நான் கரையை சேர்ந்துட்டேன்..நீங்க? சுமந்த் ராமனிடம் ட்விட்டர் பளார் வாங்கிய தி.மு.க MP!
X

Saffron MomBy : Saffron Mom

  |  8 Jan 2021 11:23 AM GMT

திருச்சியை பூர்விகமாகக் கொண்டும், திருச்சியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்ட தமிழர் டாக்டர் ராஜ் ஐயர் அமெரிக்கா ராணுவத்தின் முதல் CIOவாக பதவி ஏற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஒரு தமிழர், ஒரு இந்திய-அமெரிக்கர், சர்வதேச அளவில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்ததை வாழ்த்துகின்ற ஒரு பதிவில், தி.மு.க எம்பி டாக்டர்.செந்தில்குமார் சம்பந்தமே இல்லாமல் நுழைந்து, சுமந்த் ராமனின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்று போட முடியவில்லை என்பதற்கு பெரியாரின் சமூகநீதி சாதனையே காரணம் என்று உளறிக் கொட்டினார்.

பிராமணர்கள் உலக அளவில் சாதித்து தமிழ்நாடு, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்தாலும் அதை வாழ்த்த மனமில்லை என்றாலும் வாழ்த்துப் அவரின் பதிவில் சென்று சம்பந்தமில்லாமல் ஜாதியே இழுத்து பெரியாரின் புகழ் பாடுவது நாகரிகம் இல்லாத செயல் என்று பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்த சுமந்த் ராமன், செந்தில்குமாரின் பழைய தேர்தல் வீடியோக்களில் அவர் தனது தாத்தா பெயர் வடிவேலு கவுண்டர் என்று கூறியதை நினைவு கூர்ந்து, வடிவேலு அவருடைய பெயர் கவுண்டர் அவர் வாங்கிய பட்டமா? என்றும் நான் கரையை சேர்ந்துவிட்டேன் நீங்க? என்று வேதம் புதிது படத்தின் வசனத்தை திருப்பி போட்டு தாக்கியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, சரியான பதிலடியாக பார்க்கப்பட்டு வருகிறது.

பலரும் செந்தில்குமார் அப்படி பேசிய வீடியோக்களைப் பகிர்ந்தும், ஜாதியை ஒழித்து விட்டோம் முடித்துவிட்டோம் என்று கூறிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் தேர்தல் பரப்புரைகளில் தாங்கள் என்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்று கூறி ஓட்டு பெற முயற்சிப்பதும், சமூக வலைத்தளங்களில் சாதி மறுப்பு போராளியாக கம்பு சுற்றுவதும் தி.மு.கவின் வாடிக்கையாகும்.

பலரும் ஸ்டாலின் தன்னுடைய கட்சி தொண்டரை பார்த்து 'கவுடாவா' எனக் கேட்டதும், தி.மு.கவில் உள்ள தலித் தலைவர்களுக்கு பொது தொகுதியில் நிற்க சீட்டு வழங்க மறுப்பது என பல்வேறு கருத்துகளை தி.மு.க எம்பிக்கு ஞாபகப்படுத்தினர். அவர் சமூக வலைதளங்களில் பலரிடமும் வம்பிழுத்து, புண்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News