மதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கட்டாய மதமாற்ற காரணங்களுக்காக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
By : Bharathi Latha
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்எஸ் மங்கலம் அருகில் உள்ள கருப்பு குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் வளர்மதி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதற்காக கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தன்னை மதமாற்ற நிகழ்ச்சியில் படுத்துவதாக கூறுகிறார். அக்கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தன்னைக் கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
தன்னையும் தன் குடும்பத்தில் உள்ள பொருட்களையும், குறிப்பாக தங்கள் மகனை அடித்து அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் அவர் போலீசார் தரப்பில் கூறுகிறார். இதற்காக அவர் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்த ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் பெரும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். எனவே இதற்கான அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
Input & Image courtesy:PATA online News