அமையவிருக்கிறது இந்திய நாட்டில் நான்கு பக்கத்திலும் அனுமர் சிலை - என்ன திட்டம்?
Inaugurating a 108 feet statue of Hanuman ji in Morbi, Gujarat.
By : Kathir Webdesk
அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
ஏற்கனவே இந்தியாவின் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு, முதலாவதாக வடக்கு திசையில் சிம்லாவில் அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாவதாக மேற்கு திசையில் குஜராத்தில் அமைக்கப்பட்டது.
108 அடி உயரம் கொண்ட இந்த சிலையை அமைக்கும் பணி ரூ 10 கோடி மதிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்து தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது.
குஜராத் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை இன்று மோர்பியில் திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
அனுமன் அனைவரையும் தனது பக்தியால், தனது சேவையால் இணைக்கிறார். அனைவரும் உத்வேகம் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்திலும் நாட்டின் கிழக்கு பகுதியான மேற்கு வங்கத்திலும் அனுமன் சிலைகள் நிறுவப்படும் என நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.