மத்திய பட்ஜெட்: வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கிய இனிப்பான தகவல்!
வருமானவரி செலுத்துவோர் மூன்று லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் மட்டும் வருமான வரி செலுத்தினால் போதும்.
By : Bharathi Latha
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போது மக்களவையில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக வருமான வரி செலுத்துவோர் அனைவரின் கவனமும் தற்போதைய பட்ஜெட் தாக்கல் மீது இருந்து கொண்டு இருந்தது என்று கூறலாம். ஏனெனில் அவர்கள் எந்த அளவிற்கு வருமானம் ஈட்டினால் வருமானவரி செலுத்த வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய கேள்விக்கு தற்பொழுது பதில் கிடைத்து இருக்கிறது.
வருமான வரி செலுத்துவோரின் அளவுகள் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால் மட்டும்தான் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும். புதிய வருமான வரி அளவீடுகள் (New Slap Rate) இதோ உங்களுக்காக.,
ரூ. 0-3 லட்சம் -இல்லை
ரூ. 3-6 லட்சம் - 5%
ரூ. 6-9 லட்சம் - 10%
ரூ. 9-12 லட்சம் - 15%
ரூ. 12-15 லட்சம் - 20%
ரூ. 15 லட்சம் மேல் - 30%