பாகிஸ்தானிய பொய் பிரச்சாரத்திற்கு சம்மட்டி அடி: அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்தியா காட்டிய அதிரடி!
India dismantles Pakistani coordinated disinformation operation

By : Muruganandham
உளவுத்துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைந்த முயற்சியில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது.
சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவை. இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றிய போலிச் செய்திகளைப் பரப்புகின்றன. காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராம் மந்திர், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் பிளவுபடுத்தும் வீடியோக்களை வெளியிட அந்த சேனல்கள் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நயா பாகிஸ்தான் குழு (NPG) இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது. நயா பாகிஸ்தான் குழுமத்தின் (NPG) சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானிய செய்தி சேனல்களின் தொகுப்பாளர்களால் இயக்கப்படுகின்றன.
இந்த யூடியூப் சேனல்கள் விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக சிறுபான்மையினரைத் தூண்டிவிட முயற்சி என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டன.
நயா பாகிஸ்தான் குழுமத்துடன் தொடர்புடைய மற்றும் தனித்து செயல்படும் இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இவற்றின் காணொலிகள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க.அரசு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
