ட்விட்டருக்கு மாற்றான இந்திய ஆப் 'Koo' ? குறிப்பிட்ட அரசாங்கக் கணக்குகளும் அங்கே நகர்வதால் பரபரப்பு!
ட்விட்டருக்கு மாற்றான இந்திய ஆப் 'Koo' ? குறிப்பிட்ட அரசாங்கக் கணக்குகளும் அங்கே நகர்வதால் பரபரப்பு!
By : Saffron Mom
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITI) மற்றும் அதன் பல நிறுவனங்கள் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட கூவுக்கு (Koo) மாறிவிட்டன என்று யுவர் ஸ்டோரி செய்தி தளம் தெரிவித்துள்ளது.
அதில் வந்துள்ள செய்தியின் படி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மைகோவ், டிஜிட்டல் இந்தியா, இந்தியா போஸ்ட், NIC, NIELIT, SAMEER, Common Services Center, UMANG, NIXI, STPI, CDAC, and CMET, ஆகியவை சரிபார்க்கப்பட்ட (Verified) கணக்குகளைக் கொண்டுள்ளன.
காலிஸ்தானி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ட்விட்டர் கணக்குகளை அகற்றுவதற்கான உத்தரவுகளை பின்பற்றத் தவறியதற்காக ட்விட்டருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூஸ் 18 செய்திகளிடம் பேசிய அரசாங்க வட்டாரங்கள், “தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட கணக்குகள் காலிஸ்தானி அனுதாபிகள் அல்லது பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து செயல்படும் கணக்குகள். பல கணக்குகள் தானியங்கு போட்களாகும், அவை விவசாயிகள் எதிர்ப்பு குறித்த தவறான தகவல்களையும், வெறுப்பு பேச்சுக்களையும் பகிர்ந்து கொள்ளவும் பெருக்கவும் பயன்படுத்தப்பட்டன. ” என்றனர்.
ட்விட்டர் CEO ஜாக் டோர்சியின் ட்விட்டர் செயல்பாட்டையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது. “சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் CEO ஜாக் டோர்சி, விவசாய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு சார்ந்த பிரபலங்கள் செய்த பல ட்வீட்களை லைக் செய்தார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் ட்விட்டர் அரசாங்க உத்தரவுகளை மீறுவது பல கேள்விகளை எழுப்புகிறது. ”
பிரதமர் மோடி ஒரு ‘விவசாயிகள் இனப்படுகொலைக்கு’ முயற்சித்ததாக குற்றம் சாட்டிய ஹேஸ்டேக்கைப் போடும் கணக்குகளைத் தடுக்க ட்விட்டர் மறுத்துவிட்டது சமீபத்தில் தான். குடியரசு தின கலவரத்தைத் தொடர்ந்து ஏற்கனவே பதட்டமான சூழ்நிலையில் வன்முறையைத் தூண்டும் சாத்தியம் இருப்பதால் ட்வீட் மற்றும் கணக்குகளைத் தடுக்குமாறு இந்திய அரசு கோரியது, ஆனால் அதற்கு இணங்க ட்விட்டர் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, அரசாங்கம் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தன்னிச்சையான முடிவுகள் குறித்து ட்விட்டர் மீது கோபம் கொண்ட ஒரே அரசு இந்திய அரசு மட்டுமல்ல. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின்படி மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், கூறினார்.
“இந்த உத்தரவுகளை இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் ட்விட்டர் இதுவரை எதிர்க்கவில்லை. தர்க்கரீதியாக எந்தவொரு நிறுவனமும் எந்தவொரு அரசாங்க உத்தரவையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுதந்திரம் உள்ளது" என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.