வேகமெடுக்கும் கர்நாடக ஹிஜாப் பிரச்சினை: மலாலா வெளியீட்ட பதிவு!
கர்நாடகத்தில் தற்பொழுது வேகமெடுக்கும் ஹிஜாப் பிரச்சினை குறித்து மலாலா வெளியிட்ட டுவிட்டர் பதிவு.
By : Bharathi Latha
தற்பொழுது கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை கண்டித்து, மனித உரிமை வழக்கறிஞர் மலாலா யூசுப்சாய், "முஸ்லீம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதை நிறுத்த வேண்டும்" என்று இந்திய தலைவர்களை வலியுறுத்தினார். ஏற்கனவே இவர் காஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுமாறு ஐ.நா.வை மலாலா வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது செவ்வாய்கிழமையன்று ட்விட்டரில் கர்நாடகாவில் நடக்கும் பிரச்சனை குறித்து பதிவிட்டுள்ள மலாலா, பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது திகிலூட்டுவதாக உள்ளது.
மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், "பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது பயங்கரமானது. பெண்களின் புறக்கணிப்பு தொடர்கிறது. குறைவாகவோ அல்லது அதிகமாகவோ அணிவது அவர்களின் விருப்பம். இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" இது அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் அவரது ட்விட்டர் பதிவு வந்துள்ளது. மேலும் இவருடைய கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் இங்கு நடக்கும் நிகழ்வுகளை அறியாமல் அவர் இத்தகைய பதிவு செய்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று கருத்தை அறிவித்துள்ளார்கள். உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் நீதி கோரி ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்தியதையடுத்து, கல்லூரி வளாகத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் குங்குமப் பொட்டு மற்றும் தலைக்கவசம் அணிந்து கோஷங்களை எழுப்பியதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. இதனால் இந்தப் போராட்டம் முழுவதுமாக தீவிரமானது.
மாநிலங்களின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிட்டது. நிர்ணயித்த சீருடையைத் தவிர வேறு எந்தத் துணியையும் கொண்டு வரக்கூடாது என்று கர்நாடக அரசின் பிப்ரவரி 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
Input & Image courtesy: The week