200 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை: இந்திய யூடியூப் சேனல் அசத்தல் !
முதல்முறையாக 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை படைத்த இந்திய யூடியூப் சேனல்.
By : Bharathi Latha
சமூக ஊடகங்களில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய நேரத்தை செலவிடும் ஒரு ஊடகமாக யூடியூப் காணப்படுகிறது. அந்த வகையில் யூடியூப் தளத்தில் பல்வேறு வகையான சாதனைகளை யூடியூபர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் பெரும் சப்ஸ்கிரைபர்கள் பொருத்து வழங்கப்படும் பிளே பட்டன் மூன்று வகைப்படும். 1 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் சில்வர் பட்டன், 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் கோல்டு பட்டன், 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் டைமண்ட் பட்டன் போன்ற பல சிறப்பு பட்டன்கள் மற்றும் பரிசுகளை தனது யூடியூபர்களுக்கு யூடியூப் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் எந்த யூடியூப் சேனலும் அடைந்திடாத புதிய உச்சத்தை T-சீரிஸ் என்கிற யூடியூப் சேனல் அடைந்துள்ளது. இந்த சேனலை சுமார் 200 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். உலகளவில் முதல் முறையாக 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது T-சீரிஸ் யூடியூப் சேனல். பல ஆண்டுகளாக பியூடிபை என்கிற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த யூடியூபரின் சேனல் தான் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்று முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது புதியதொரு இலக்கை எட்டியுள்ளது.
மேலும் இதைப் பற்றி அந்த யூடியூப் சேனலில் நிர்வாக இயக்குனரான பூஷன் குமார் கூறுகையில், "இவ்வளவு சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் இந்திய யூடியூப் சேனலாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யூடியூப்பில் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்த முதல் சேனலாக உள்நாட்டு இந்திய சேனல் மாறி யிருப்பதால், இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Input & Image courtesy:Business Standard