Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரபலங்கள்!

Save Tiger, Save Forest

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய  பிரபலங்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 July 2021 1:15 PM GMT

ஒவ்வொரு ஆண்டும் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் புலிகள் பற்றிய மக்களின் அன்பு அளப்பரியதாக இருந்துவருகிறது. காடுகளின் பாதுகாப்பிற்கு புலிகள் எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஏன்? என்றால், தற்போது வரக்கூடிய இளைய தலைமுறையினர் கூட புலிகளின் நன்மைகளைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. காட்டை பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரிய வகை மூலிகைகள் போன்றவற்றில் பாதுகாக்கவும் ஒரு நண்பனாகவே புலிகள் இருந்து வருகின்றனர்.




சர்வதேச புலிகள் தினத்தன்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் தங்கள் நாட்டில் உள்ள புலிகளின் பலத்தை பற்றி செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்கள். 2021 சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், புலி பாதுகாப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுபவர்களுடன் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொண்டார். டெண்டுல்கர் தனது தடோபா-அந்தாரி புலி ரிசர்வ் வருகையிலிருந்து இன்ஸ்டாகிராமில் ஒரு சில த்ரோபேக் படங்களையும், ஒரு சிறிய வீடியோ கிளிப்பையும் வெளியிட்டார்.


எனவே இதைப்பற்றி அவர் கூறுகையில், புலிகளை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை தான். எனவே அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியை நாம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைப் போன்று இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் திறமைக்கு பெயர் பெற்றவர் என்றே சொல்லலாம். இவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

Inputs: https://sports.ndtv.com/cricket/international-tiger-day-2021-sachin-tendulkar-anil-kumble-spread-awareness

Image courtesy: NDTV


Next Story
கதிர் தொகுப்பு
Trending News