விண்வெளிக்கு பெண் ரோபோ அனுப்பும் ககன்யான் திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்!
விண்வெளிக்கு பெண் ரோபோ அனுப்பும் திட்டத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் அறிவித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் அவர்கள் தற்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொழுது விண்வெளிக்கு பெண் ரோபோ அனுப்பும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் கூறும் பொழுது ககன்யா திட்டத்தின் கீழ் இரண்டு தொடக்க இயல்புதல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ஆண்டு பின்பகுதியில் மேற்கொள்ளும் என்று தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இந்த திட்டத்தின் முதலாவது அமைப்பான முழுக்க முழுக்க ஆளில்லாத திட்டமாக அமையும் இரண்டாவது திட்டத்தில் வயோ மித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இந்த இரண்டு திட்டங்கள் இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்றிருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒரு திட்டம் தாமதமாகிவிட்டது. ஆனால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது, தற்போது மும்மரமாக களம் இறங்கி இருக்கிறது. இஸ்ரோ இந்த இரண்டு ஏவுதல் நடவடிக்கைகளையும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தில் இந்தியாவில் இருந்து இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா சோவியத் ரஷ்யாவால் ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ககன்யான் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முழுக்க முழுக்க இந்தியாவின் தற்சார்பு திட்டமாக அமைந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Indian Express