Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் கங்கன்யான் திட்ட ரகசியம் கேட்டு போன் கால்: பிரதமர் மோடிக்கு இஸ்ரோ விஞ்ஞானி கடிதம்!

இந்தியாவின் கங்கன்யான் திட்ட ரகசியத்தை வெளியிடுமாறு இஸ்ரோ விஞ்ஞானிக்கு துபாய் நாட்டை சேர்ந்த சிலர் போன் காலில் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவின் கங்கன்யான் திட்ட ரகசியம் கேட்டு போன் கால்: பிரதமர் மோடிக்கு இஸ்ரோ விஞ்ஞானி கடிதம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Nov 2022 9:40 AM GMT

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் தான் இந்த கங்கன்யான் திட்டம். எனவே இந்த திட்ட ரகசியத்தை வெளியிட மறுத்தால் என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். இது பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.


இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான பணிகளின் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ராக்கெட் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் பிரவீன் மௌரியா. இவர் சமீபத்தில் தன்னுடைய twitter பதிவில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதில் கங்கன்யா திட்டம் குறித்த ரகசிய தகவல்களை கேட்டு துபாய் நாட்டை சேர்ந்த சிலர் தன்னை தொடர்பு கொண்டனர் அதற்கு கோடிக்கணக்கான பணியில் பணம் தருவதாகவும் கூறினார்கள்.


இது தொடர்பாக இஸ்ரோ தலைவருக்கு கடந்த நவம்பர் 5ஆம் தேதி தகவல் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கேரள போலீசார் என்னை கஞ்சா வழக்கில் கடத்தியதாக தொந்தரவு செய்து இருக்கிறார்கள். ரகசியங்களை வெளியிட மறுத்தால், என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைத்து சதி நடக்கிறது. எனவே துபாய் உழவாளிகளுக்கு கேரள போலீஸ் இருக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறேன். இந்த விவகாரத்தில் கேரள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டு உள்ளார். அதே போல் முன்னாள் இஸ்ரோ தலைவர் உறவினர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே இது தொடர்பாக உளவுத்துறை விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று அந்த காலத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி இருப்பதாக அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News