Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: 100 கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி IT நிறுவனம்!

100 ஊழியர்களுக்கு 100 கார் பரிசாக வழங்கி அதிர்ச்சி கொடுத்த சென்னை Ideas2 IT நிறுவனம்.

சென்னை: 100 கார்களை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி IT நிறுவனம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 April 2022 7:26 PM IST

பொதுவாகக் குஜராத் வைர ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் லாபத்தில் ஒரு பகுதியை முக்கியமான ஊழியர்களுக்கும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக அளிப்பது வழக்கம். இந்தக் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வகையில் IT துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்தகைய சலுகைகளை வவழங்குகிறது. கிஸ்ப்லோ நிறுவனம் சமீபத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கிஸ்ப்லோ நிறுவனம் கடந்த வாரம் 5 முக்கிய உயர் மட்ட அதிகாரிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான BMW கார்களை அளித்துச் சக ஐடி மற்றும் டெக் ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது.


இதனால் மற்றொரு சென்னை நிறுவனம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. Ideas2 IT நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2 நிறுவனம், தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து, இணையற்ற பங்களிப்பை பாராட்டும் விதமாக 100 ஊழியர்களுக்குப் புதிய மாருதி கார்களைக் கொடுத்து அசத்தியுள்ளது. 100 புதிய மாருதி சுசூகி காரை Ideas2 நிறுவனத்தின் CEO காயத்திரி விவேகானந்தன் 100 ஊழியர்களுக்கு, இந்நிறுவன நிறுவனர் மற்றும் தலைவரான முரளி விவேகானந்தன் முன்னிலையில் இன்று அளிக்கப்பட்டது.


100 ஊழியர்களுக்கு 100 கார்களைக் கொடுத்தது குறித்து Ideas2 நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், "கார்களைப் பரிசளிப்பது குறித்து ஊழியர்களால் இணைந்து கூட்டாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் படி நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் வழங்கப்பட்டு உள்ளது" என்று கூறினார்.

Input & Image courtesy: Goodreturns News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News