ஒரே இரவில் மசூதியாக மாறிய ஜூஸ் கடை - என்ன நடக்கிறது வேலூரில்? நேரடி களம் காணும் இந்து முன்னணி!
Juice shop overnight turns into mosque, Hindu Munnani protests
By : Kathir Webdesk
வேலூர் காந்தி சாலையில் உள்ள சர்க்கார் மண்டி தெருவில் திடீரென கட்டப்பட்ட மசூதிக்கு இந்து முன்னணி எதிர்த்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முறையான அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டதாகவும், இரவோடு இரவாக ஒரு வீடு மசூதியாக மாற்றப்பட்டதாகவும் இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். 100மீ தொலைவில் மூன்று கோவில்கள் இருப்பதால், மசூதி கட்டுவது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், மசூதி இருக்கும் பகுதி வழியாக கோவில் ஊர்வலங்கள் நடத்தப்படுவதால், இந்துக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும், இந்து மத ஊர்வலம், மசூதியின் முன் அல்லது முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி வழியாக செல்லும்போது, கல் வீச்சு அல்லது வன்முறை உருவாகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் ஜார்கண்டில் ரூபேஷ் பாண்டே என்ற சிறுவன் இளைஞனை கொடூரமாக கும்பல் அடித்துக் கொன்றது.
தற்போது மசூதி கட்டப்பட்டுள்ள கட்டிடம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், இது அண்மையில் புனரமைக்கப்பட்டு மசூதி என்ற போர்டு வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். உரிய அனுமதியின்றி திடீரென எப்படி மதக் கட்டிடம் கட்ட முடியும் என்று கேள்வி எழுப்பிய இந்து முன்னணி, அப்பகுதியில் வகுப்புவாத பதற்றத்தைத் தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.
அந்த 2400 சதுர அடி சொத்து ஒரு முஸ்லீம் குடும்பத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. வீட்டின் முன்புறத்தில் ஒரு சிறிய ஜூஸ் கடை நடத்தப்பட்டு வந்தது.
இ ந்து முன்னணி தலைவர் ஆர்.மணிசாமி, ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "வணிகச் சொத்துக்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் திடீரென மசூதியாக மாற்றப்படுவதாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மேலும், 100 மீட்டர் சுற்றளவிற்குள் மூன்று கோவில்கள் உள்ள இடத்தில் மசூதி வரவிருக்கிறது, மேலும் எங்கள் கோவில் ஊர்வலங்கள் இந்த பகுதி வழியாக வெளியே கொண்டு செல்லப்படுகின்றன என்றார்.
இதுகுறித்து வேலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இந்த இடம் தனிப்பட்ட வழிபாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டது. இப்போது பொது வழிபாட்டு மையமாக மாற்றி பலகை வைத்துள்ளனர். இதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும், அதற்கான ஆவணங்களை வருவாய்த் துறையினர் சரிபார்த்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறியதாக தெரிவித்தார்.