Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.கவின் இரட்டை வேடம் - முரசொலிக்கு கதிர் செய்திகள் பதிலடி.!

தி.மு.கவின் இரட்டை வேடம் - முரசொலிக்கு கதிர் செய்திகள் பதிலடி.!

தி.மு.கவின் இரட்டை வேடம் - முரசொலிக்கு கதிர் செய்திகள் பதிலடி.!
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Nov 2020 9:32 AM GMT

இன்றைய முரசொலியில் "சென்னையில் உச்சநீதிமன்றம் - வில்சன் எம்.பியின் கோரிக்கையும் நமது விருப்பமும் என்ற தலைப்பில்" தென்னிந்தியாவில் உச்ச நீதிமன்ற கிளை வேண்டும் அதுவும் சென்னையில் வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.கவின் கருத்தாக முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் தி.மு.க சார்பாக சென்னையில் உச்ச நீதிமன்றம் அமைய காரணிகளாக சில அம்சங்கள் குறிப்பிடபட்டுள்ளன.
அதில் முக்கியமானவை,
1) டெல்லி உச்சநீதிமன்றம் சென்று முறையிடவும், வழக்குகளில் பங்கேற்கவும் 50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகிறது.
2) 133 கோடி இந்திய மக்கள் தொகைக்கோ 34 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர், இந்த விகிதாச்சாரம் குறைவாகும்.
3) கடந்த 2011 ஆண்டு அறிக்கையின் படி டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்கள்தான் அதிகம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். தென் மாநிலங்களில் உள்ளவர்களின் உச்ச நீதிமன்ற முறையீடு குறைவு.

என்ற மூன்று முக்கிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக சென்னையில் உச்சநீதிமன்றம் வேண்டும் என்பதை தி.மு.க இன்றைய முரசொலியின் தலையங்கம் மூலம் வலியுறுத்துகிறது.

என்ன ஒரு இரட்டை வேடம் தி.மு.கவிற்கு. தனக்கு சாதகம் எனில் இந்திய தேசத்தின் வரைபடத்தையே மாற்றுபவர்களாயிற்றே இவர்கள் பின் உச்சநீதிமன்றம் எம்மாத்திரம்?

மத்தியில் உள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் வேண்டும் என கேட்கும் இதே தி.மு.க எத்தனையோ மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்துள்ளது. அதை பற்றி குறிப்பிட்டால் தனி புத்தகமே எழுத வேண்டி வரும். இரண்டு முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

தேசியப் புலனாய்வு முகமை என்கிற என்.ஐ.ஏ விஷயத்தில் தி.மு.க செய்தது என்ன என்பதை நினைவு கூறி பார்த்தால் விளங்கும்.

தமிழ்நாட்டி தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ கிளை நிறுவப்பட வேண்டும என வாதம் வந்தபொழுது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை, "தமிழகத்தில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு எனத் தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி அலுவலகத்தில் இருக்கிறது. அதோடு, 'க்யூ பிராஞ்ச்' என்கிற தனிப்பிரிவும் இருக்கிறது. இவை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி, என்.ஐ.ஏ-வைத் தமிழகத்தில் அனுப்பி, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து, இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் அபாயகரமான போக்கை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்'' என கூறி அரசியல் செய்தவர் ஸ்டாலின்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த பொழுது இங்கே படிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்தை பற்றி துளியும் கவலைப்படாமல் அதிலும் தி.மு.க அரசியல் செய்தது.

நவோதயா பள்ளிகளின் தமிழக வருகையை பற்றி கனிமொழி உதிர்த்த வார்த்தைகள் இவை, "மத்தியில் ஆள்வது காங்கிரஸாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும், தமிழகத்தின் மாநிலக் கொள்கைகளை பாதிக்கும் திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

அதன் நீட்சியாகவே நீட் தேர்வு, காவிரிப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என அதைத் தொடர்ந்து நவோதயா பள்ளிகள் மூலம் இந்தித் திணிப்பை தமிழகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சியாகத்தான் இதை பார்க்க முடிகிறது.

இது குறித்து தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் கூடாது, தமிழக அரசு நவோதயா பள்ளிகள் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை மேல்முறையீடு செய்ய வேண்டும்" என தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் வருவதை வரவிடாமல் செய்தது இந்த தி.மு.க.

இப்படி தமிழகத்திற்கு பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் படிப்பிற்காக வரும் மத்திய அரசின் திட்டங்களை தனது மலிவான அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து வந்த தி.மு.க தற்பொழுது உச்சநீதிமன்ற சென்னை கிளை விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

அதாவது நாட்டின் பாதுகாப்பு கருதி சென்னையில் தேசிய புலனாய்வு முகமை திறப்பை தடுத்த தி.மு.க, மாணவர்களின் கல்விக்காக நவோதயா பள்ளிகளை திறப்பதை தடுத்த தி.மு.க உச்சநீதிமன்றம் கிளை திறப்பை பற்றி கவலை கொள்கிறது. மக்கள் மீது அக்கரையிருந்தால் இவர்கள் பாதுகாப்பு, கல்வி என அனைத்தையும் அனுமதித்திருப்பார்கள். ஊழல் கூட்டமாகிய இவர்கள் சென்று வர வசதியாக உச்சநீதிமன்றம் வேண்டும் என கேட்கின்றனர் தி.மு.க'வினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News