பரிந்துரைகளை மீறி சர்ச் கட்ட அனுமதி - போராட்டத்தில் இறங்கும் எம்.ஆர்.காந்தி!
வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளை மீறி குமரி மாவட்டத்தில் சர்ச் கட்ட அனுமதி வழங்கியதை தொடர்ந்து பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது.
By : Bharathi Latha
வேணி கோபாலன் கமிஷன் பரிந்துரைகளை மீறி குமரி மாவட்டத்தில் சர்ச் கட்ட அனுமதி வழங்கிய வழங்கியதை தொடர்ந்து பா.ஜ.க சார்பில் டிசம்பர் 11ஆம் தேதி போராட்டம் நடைபெற இருப்பதாக பா.ஜ.க MLA N. R. காந்தி அறிவித்து இருக்கிறார். கடந்த 1982 ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களுக்கு கன்னியாகுமரியில் புதிய வழிபாடு தளங்களை கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர் மோகன் தங்கராஜ் வற்புறுத்தலின் பெயரில் 54 சர்ச்சுகளை கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி இருக்கிறார்.
திங்கள் சந்தை அருகில் புதுவிளையில் நீதிமன்ற தடைகளை மீறி போலீஸ் பாதுகாப்புடன் சர்ச் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்காவிட்டால் மாவட்டத்தில் மத கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனது இவற்றை கண்டித்து தடைகளை மீறி புதிய சர்ச் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி இருப்பது அனைவரின் கவனத்திற்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய விஷயம். இதனால் பா.ஜ.க சார்பில் டிசம்பர் 11ஆம் தேதி அடையாளம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி கூறியிருக்கிறார்.
மேலும் இந்த விஷயத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இது பற்றி கூறுகையில், வேணுகோபாலன் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை ஏற்க முடியாது என்று கூறிய முதல் கலெக்டராக இவர் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர், எஸ்.பி, மேயர் என பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது அமைச்சரின் மகன் லேப்டாப்புடன் அமர்ந்து மற்றவர்களுக்கு அறிகுறி கூறுகிறார். எனவே நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமைச்சர் மகன் தலையிடுவது சரி இல்லை என்று அவர் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy:Dinamalar News