பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் மோசடிகள் - ஒற்றை எழுத்து நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படும் பத்திரப்பதிவுத்துறை!
பத்திர பதிவு துறையில் தற்பொழுது ஒற்றை எழுத்து நிறுவனத்திற்கு சாதகமாக பல்வேறு முடிவுகளை அரசு எடுத்து இருக்கிறது.
By : Bharathi Latha
நில அபகரிப்பிற்கு பேர்போன தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து தற்போது வரை பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறு வருவதாக மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள். மேலும் ஒற்றை எழுத்து நிறுவனத்திற்கு பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாகவும் ஏழை எளிய மக்களை அவர்கள் வேறு எடுத்துக் கூட பார்ப்பதில்லை என மக்கள் தற்போது பெரும் குற்றச்சாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இரண்டு சென்ட், மூன்று சென்ட் என சிறிய அளவில் நிலங்களை வைத்து இருக்கும் மக்களிடம் பத்திரப்பதிவு செய்ய முன்வரும் போது அவர்களிடம் ஒற்றை எழுத்து நிறுவனம் தங்களுடைய கைகளில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவ்வாறு பத்திர பதிவு செய்பவர்களை தடுத்து வருகிறது. மேலும் அவர்களுடைய நிலங்களை முறையற்ற முறையில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
குறைந்த அளவுள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் மக்கள் குற்றம் சற்றி இருக்கிறார்கள். குறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்கள் உடைய இரண்டு மூன்று சென்ட் நிலங்களை தங்களுடைய மகளின் திருமணத்திற்காக அல்லது மகன்களின் படிப்பிற்காக விற்க முன் வரும் பொழுது அவற்றை பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கான மனுவை தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலப்பு மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: J News