சிவனுக்காக படைக்கப்பட்ட ஐஸ்கிரீம் பிரசாதம்: காரணம் என்ன ?
சிவனுக்காக வித்தியாசமான முறையில் படைக்கப்பட்ட ஐஸ்கிரீம் பிரசாதம்.
By : Bharathi Latha
ஒவ்வொருவரும் தன் வேண்டிக் கொள்வது நிறைவேற்றிய பிறகு கடவுளுக்கு ஏதேனும் காணிக்கை செய்வதாக வேண்டிக் கொள்வார்கள். அவற்றை பிரசாதம் அல்லது நைவேத்தியம் என்று கூறுவார்கள். ஏனெனில் கடவுளுக்கு படைக்கும் தனித்தன்மை வாய்ந்த பிரசாதத்துடன் பக்தர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என்று அர்த்தம். சாதாரணமாக திருவிழாக் காலங்களில் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம் என்றாலும், இந்த குறிப்பிட்ட கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில சுவையான பிரசாதங்களை பெறுவதற்காகவே செல்வார்கள் என்று சொல்லலாம்.
நாம் இதுவரை கடவுளுக்கு படைக்கப்பட்ட பல்வேறு வகையான பிரசாதங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் பார்த்து இருக்கிறோம் ஆனால் வித்தியாசமான முறையில் ஒருவர் கடவுளுக்கு, பாலகோலைச் சேர்ந்த தேவெல்ல நரசிம்ம மூர்த்தி என்பவர், சிவபெருமானுக்கு 10 கிலோ ஐஸ்கிரீமை நைவேத்தியமாக வழங்கியதன் மூலம் அவர் தனது சொந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சிவலிங்கத்தின் மீது ஐஸ்கிரீம் ஊற்றப்பட்டு, அது தெய்வத்தை சுற்றி அமைந்திருந்ததால், பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று அந்த அற்புதமான காட்சியைப் பார்க்கச் சென்றனர்.
இப்படிப்பட்ட ஒரு பிரசாதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல பிரசாதமாக வழங்கப்பட்ட குளிர்ந்த ஐஸ்கிரீமை சுவைக்க பல பக்தர்கள் புகழ்பெற்ற கோவிலில் நீண்ட வரிசையில் நின்றதும் பெரிய விஷயமாக பேசப்பட்டது. பொதுவாக இக்கோயிலுக்கு வரும் சிலர் பாயசம், சக்கர பொங்கல் மற்றும் பூர்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்குகின்றனர். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீம் பிரசாதமாக வழங்குவது இதுவே முதல் முறை.
Input & Image courtesy: News 18