Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு - முடிவு யாருக்கு சாதகமாக அமையும்?

கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு மே-19 அன்று வெளியான உள்ளது.

கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு - முடிவு யாருக்கு சாதகமாக அமையும்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 May 2022 1:56 AM GMT

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி மற்றும் ஷாஹாய் இடிகா மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பு மே 19 அன்று வெளியாக உள்ளதாக மதுரை மாவட்ட நீதி மன்றம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. லக்னோ பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், கிருஷ்ணர் பிறந்த இடமான இங்கு கத்ரா கேசவ் தேவ் கிருஷ்ணர் கோயில் உள்ளது.


ஆனால் அன்றைய காலகட்டங்களில் சுமார் 1670 காலகட்டங்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப் அவர்களின் உத்தரவின் பெயரில் 13.37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான வழக்கு ஒன்று நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மேலும் அங்குள்ள மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்ம பூமியான அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு மதுரா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இதன் தீர்ப்பு விரைவில் வெளியாகும்.


மே 19ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி ராஜீவ் பாரதி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள கியான்வாபி மசூதியின் நீதிமன்ற உத்தரவின் பேரில் சர்வே எடுப்பது தொடர்பான வீடியோ மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தீர்ப்பு வெளியாகும் வரை பலத்த பாதுகாப்பு அந்தப் பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News