Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைனில் பல இதயங்களை வென்ற மகேந்திரா நிறுவன உரிமையாளரின் பதில் !

மகேந்திர நிறுவனத்தின் உரிமையாளரான ஆன ஆனந்த் மகேந்திராவின் இந்த பதில் தற்போது ஆன்லைனில் பல இதயங்களை வென்றுள்ளது.

ஆன்லைனில் பல இதயங்களை வென்ற மகேந்திரா நிறுவன உரிமையாளரின் பதில் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Aug 2021 1:40 PM GMT

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் நேர்மறையான கருத்துக்களையும் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் வரும் நபர்களில் ஒருவராக அறியப்படும் மகேந்திரன் நிறுவனத்தின் உரிமையாளரான ஆனது ஆனந்த் மகேந்திரா. அவர் தற்பொழுது ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஆதரவாக ஒரு ட்விட்டை பதிவு செய்துள்ளார். குறிப்பாக அந்த பதிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களையும் பங்கேற்பாளர்களையும் ட்வீட் செய்து வாழ்த்தி வரும் மஹிந்திரா, பாகுபலி வேடத்தில் நடிக்கும் நடிகர் பிரபாஸின் படத்தையும் சேர்த்து, "நாங்கள் அனைவரும் உங்கள் இராணுவத்தில் இருக்கிறோம்" பாகுபலி என்றும் போட்டு இருந்தார்.


எனவே இவருடைய இந்த பதிவிற்கு பல மக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களையும் மற்றும் தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தனர். அதில் குறிப்பாக ஒரு பயனாளர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்ற தந்த நீரஜ் சோப்ராவுக்கு XUV700 வழங்க கோரிய ட்விட்டர் மூலம் ஆனந்த் மஹிந்திராவின் கேட்டுள்ளார். அவரின் அந்த கேள்விக்கு தற்பொழுது ஆனந்த் மகேந்திரா அவர்கள் பதில் அளித்துள்ளார். ஆம், நிச்சயம் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு, மகேந்திரா குழுமத்தின் சார்பாக XUV700 எனும் அதிநவீன கார் பரிசாக வழங்கப்படும் என்று பதில் கூறி இருக்கிறார்.



எனவே அவருடைய அந்த பதில் ஆன்லைனில் இதயங்களை வென்றது. மகேந்திராவின் சலுகையில் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், மற்றவர் ட்விட்டர் பயனாளர்கள், தொழிலதிபரும் அவரது குழுவும் விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்பான்சர் செய்யலாம் என்று பரிந்துரைத்தனர். எனவே தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தங்கம் வென்ற தங்க மகனுக்கு தற்பொழுது அதிநவீன ஆடம்பர கார் ஒன்று பரிசாக கிடைக்க இருக்கிறது என்பது அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Input: https://indianexpress.com/article/trending/trending-in-india/anand-mahindra-response-to-twitter-user-requesting-xuv700-for-neeraj-chopra-wins-hearts-online-7444057/

Image courtesy: indian express


Next Story
கதிர் தொகுப்பு
Trending News