Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைன்-ரஷ்யா போர்: தாய் நாட்டிற்காக போராடும் உக்ரைன் மக்களின் வீடியோ!

உக்ரைன் நாட்டு மக்கள் ஆர்வத்துடன் போரில் பங்கு கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

உக்ரைன்-ரஷ்யா போர்: தாய் நாட்டிற்காக போராடும் உக்ரைன் மக்களின் வீடியோ!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Feb 2022 2:31 PM GMT

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்கையில், பாதுகாப்பான பகுதிகளை நோக்கி தற்போது உக்ரைன் நாட்டு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் உக்ரைன் போரில் பங்கேற்க தன்னார்வலர் களையும் நாட்டு மக்களையும் உக்ரைன் அரசு அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல மக்கள் தங்களுடைய குடும்பங்களை விட்டு நாட்டிற்கு உதவ முன் வந்துள்ளார்கள். அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில், பாதுகாப்பான இடத்தில் தனது மகளை விட்டு நாட்டிற்கு போராட போகும் ஒரு தந்தையின் 43 வினாடிகள் கொண்ட வீடியோவில், பொதுமக்களுக்கான பாதுகாப்பான இடத்தில் ஒருவர் தனது குடும்பத்தினரிடம் கண்ணீருடன் விடைபெறுவதை அந்த வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அதன் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில், உக்ரேனிய குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது அல்லது தங்கள் நாட்டிற்காக போராடுவதற்காக மீண்டும் தங்குவது போன்ற பயங்கரமான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வைரலாகி வரும் இதுபோன்ற ஒரு வீடியோ, தனது நாட்டிற்காக ஆயுதம் ஏந்தியதற்காக தந்தை தனது இளம் மகளிடம் விடைபெறும் ஒரு தந்தையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் உணர்ச்சிகரமாக பார்க்கப்பட்டது.


இந்த வீடியோவை நியூஸ் EU நேற்று பிப்ரவரி 24 அன்று தங்கள் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. மேலும் இதுவரை பல லட்சக்கணக்கான மக்களும் இந்த வீடியோவை பார்த்துள்ளார்கள். ரஷ்ய மற்றும் உக்ரைன் தற்போது கியேவுக்கு வெளியே சண்டையிட்டு வருகின்றன. மாஸ்கோவின் படைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். படையெடுப்பை எதிர்க்க முடிந்த அனைத்தையும் செய்ததற்காக தனது நாட்டு மக்களையும் அவர் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: First post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News