மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இவ்வளவு பாராட்டா... சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கும் பிரதமரின் குரல்...
மனதின் குரல் உண்மையான பாரதத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.
By : Bharathi Latha
இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவனம் (IIMC) நடத்திய சிறப்பு ஆய்வில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' உண்மையான பாரதத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது என்று 76% இந்திய ஊடகவியலாளர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்ச்சி நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விஷயங்களைப் பற்றி மக்கள் இப்போது அதிகம் அறிந்து கொள்ளும் போக்கை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் அதனைப் பாராட்டவும் தொடங்கியுள்ளனர். பதிலளித்தவர்களில் 75% பேர், இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உறுதி செய்வதற்காக தன்னலமின்றி உழைக்கும் அடித்தட்டு மக்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக 'மனதின் குரல்' உருவெடுத்துள்ளதாகக் கருதுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 116 ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில், ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக மாணவர்களுடன் தொடர்புடைய மொத்தம் 890 பேர் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் 326 பேரும் ஆண்கள் 564 பேரும் உள்ளனர். பதிலளித்தவர்களில் 66% பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். பதிலளித்தவர்களின் கூற்றுப்படி, 'நாட்டைப் பற்றிய அறிவு' மற்றும் 'நாட்டைப் பற்றிய பிரதமரின் பார்வை' ஆகிய இரண்டு முக்கியக் காரணங்களாக நிகழ்ச்சியைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் விவாதித்த எந்தப் பிரச்சினை மக்களை அதிகம் பாதித்தது என்பதையும் இந்த ஆய்வு புரிந்து கொள்ள முயற்சித்ததாக பேராசிரியர் திவிவேதி சுட்டிக் காட்டியுள்ளார். பதிலளித்தவர்களில் 40% பேர் 'கல்வி' என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் 26% பேர் 'அடித்தட்டு மக்களின் சாதனைகள் பற்றிய தகவல்' மிகவும் செல்வாக்கு மிக்க தலைப்பு என்று கூறியுள்ளனர்.
Input & Image courtesy: News