செல்வமகள் சேமிப்புத் திட்டம்: இரண்டே நாட்களில் ஒரு மில்லியன் கணக்குகள் தொடக்கம்!
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டே நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டது.
By : Bharathi Latha
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்கள் தங்களுடைய மகளுக்காக வரும் காலத்தில் சேமிக்க வேண்டும் என்ற ஒரு தொடக்கத்திற்காக இந்த ஒரு கணக்கை நீண்ட காலங்களாக சேமிக்கும் பழக்கத்தை கொண்டு தொடங்கி இருக்கிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெற்றோர்கள் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டே நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டதற்காக இந்திய அஞ்சல் துறைக்கு பிரதமர் பாராட்டு. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இரண்டே நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டதற்காக இந்திய அஞ்சல் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெண்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறுகையில், இத்தகைய மிகப்பெரிய சாதனையைப் புரிந்த இந்திய அஞ்சல் துறைக்கு நல்வாழ்த்துகள். இந்த முயற்சி, நாட்டின் திருமகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும், அவர்களுக்கு அதிகாரமளிக்கும்.
Input & Image courtesy: News