Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் காணாமல் போவதில் குஜராத் முன்னிலையா... நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் உண்மை என்ன?

குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக வெளியிட்ட செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

பெண்கள் காணாமல் போவதில் குஜராத் முன்னிலையா... நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் உண்மை என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 May 2023 1:19 PM GMT

தமிழகத்தில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய ஒரு திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக இந்த ஒரு படத்தில் கேரளவில் இளம் பெண்கள் மதமாற்றம் செய்து அவர்களை இங்கிருந்து கடத்தி வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கும் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து விடுவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது. தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு ஆளும் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. திரைப்படத்தின் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி காட்சிகள் என்றால் இந்தியாவில் இருந்து பெண்கள் காணாமல் போவது தான்.


Screen shot: The New Indian எக்ஸ்பிரஸ்


அப்பொழுதுதான் பல்வேறு மீடியாக்கள் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தில் அதிகமாக பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்று ஒரு தகவலை தேட ஆரம்பித்தது. அப்போது அதிகாரப்பூர்வமான வலைத்தளமான தேசிய குற்ற ஆவன காப்பகம் (NCRP) இது தொடர்பான தகவல்களை வழங்கி இருக்கிறது. மேலும் இது தொடர்பாக பா.ஜ.க மாநில செயலாளர் (IT- DM cell) G.பிரதீப் அவர்கள் இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், 2016-2020 வரை குஜராத்தில் 41,621 பெண்களை காணவில்லை என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த அறிக்கையில் மற்ற மாநிலங்களின் தரவு புறக்கணிக்கப்படுவதைப் பார்ப்பது கவலைக்குரியது. ஏனெனில் பெண்கள் அதிகமாக காணாமல் போகும் மாநிலங்களை புறம் தள்ளிவிட்டு குஜராத்தை மட்டும் குறி வைத்து செய்திகளை பரப்புவது கவலைக்குரியது தான்.


‘தி கேரளா ஸ்டோரி’ என்று மோடி குறிப்பிட்டதால், குஜராத்தை குறிவைக்கும் திட்டமிட்ட முயற்சியா இது? என்று தெரியவில்லை. ஆனால் மறைமுகமாக அப்படித்தான் இந்த ஒரு செயல் காட்டுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் அதிகமாக பெண்கள் காணாமல் போகும் பட்டியலில் குஜராத் இல்லை. மேற்கு வங்காளத்தில் தான் அதிகமாக பெண்கள் - 1,43,102 (2016-2020) காணாமல் போய் இருக்கிறார்கள். அதை மாதிரி 2016 முதல் 2020 ஆம் ஆண்டு ஆண்டில் தமிழகத்தில் சுமார் 53 ஆயிரத்து 780 பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், அதிகமான மக்கள் தொகை கொண்ட சுமார் 20 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் குறைவு - 25,535 பெண்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற அவன காப்பகம் தெரிவித்து இருக்கிறது.

Input & Image courtesy: Twitter Source

Next Story
கதிர் தொகுப்பு
Trending News