Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலையுடன் விவாதத்திற்கு பயந்து ஏற்கனவே ஓடிய எம்.பி.செந்தில்குமார் மீண்டும் வந்துள்ளார் - இந்தமுறை ஓடாமல் இருப்பாரா?

அண்ணாமலையுடன் விவாதத்திற்கு பயந்து ஏற்கனவே ஓடிய எம்.பி.செந்தில்குமார் மீண்டும் வந்துள்ளார் - இந்தமுறை ஓடாமல் இருப்பாரா?

அண்ணாமலையுடன் விவாதத்திற்கு பயந்து ஏற்கனவே ஓடிய எம்.பி.செந்தில்குமார் மீண்டும் வந்துள்ளார் - இந்தமுறை ஓடாமல் இருப்பாரா?

Mohan RajBy : Mohan Raj

  |  26 Nov 2020 5:13 PM GMT

தன் செயல்களால் தமிழகத்தில் ஓர் கட்சி மக்களிடம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி நிற்கிறது என்றால் அது அண்ணாதுரையால் துவங்கப்பட்டு, கருணாநிதி'யின் மகன் ஸ்டாலினின் தலைமையில் தற்பொழுது நடத்தப்படும் தி.மு.க'தான். அரசியல் விளம்பரத்திற்காக பணத்தை கோடியில் செலவு செய்து விளம்பரபடங்கள் எடுத்து அதன் மூலமே தங்கள் முகத்தில் கரியை பூசிக்கொள்கின்றனர்.

அப்படி தி.மு.க தலைமைதான் விளம்பர படம் எடுத்து தனது முகத்தில் கரியை பூசிக்கொள்கிறது என்றால் தலைமைக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற பெயரில் தி.மு.க'வின் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ அனைவருமே மக்களிடத்தில் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.

அந்த வகையில் தி.மு.க தலைமையின் விளம்பரபடத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய அண்ணாமலை'யிடம் வலிய வந்து சிக்கிக்கொண்டு அசடு வழிய நிற்கிறார் தி.மு.க தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்.

ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் விளம்பரங்களுக்காக பணம் செலவழித்து ஆட்களை திரட்டி மக்கள் மத்தியில் போலியாக பரப்புகின்றனர் தி.மு.க'வினர் இதனை சுட்டிக்காட்டிய பா.ஜ.க'வின் துணைத்தலைவர் அண்ணாமலை அவர்களிடம் வலிய சென்று வாய் கொடுத்து மாட்டியிருக்கிறார் எம்.பி.செந்தில்குமார்.

ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் விளம்பர படங்களில் வருவது வேறு வேறு நபர்கள் இதனை நான் நிரூபிக்க தயார் என தலையை அண்ணாமலையிடம் தானாகவே வந்து வாய் விட்டார். ஏற்கனவே அண்ணாமலை அவர்கள் விவாதத்திற்கு அழைத்த பொழுது பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிய எம்.பி.செந்தில்குமார் அந்த சம்பவத்தை மறந்து மீண்டும் வந்து சிக்கியது தி.மு.க'வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை அவர்கள் "உங்களை ஏற்கனவே விவாதத்திற்கு கூப்பிட்டு நீங்கள் வரவில்லை முதலில் விவாதத்தை முடியுங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம்" என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துவிட்டார்.

மேலும் எம்.பி.செந்தில்குமாருக்கு பதிலளித்த அண்ணாமலை "நீங்கள் உங்கள் தாத்தா மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி வந்தவர் ஆனால் நான் சாதாரண ஆள் அதனால் கட்சியில் அனைத்து நிலைகளையும் மதிக்கிறேன்" என பதிலடி தந்துள்ளார்.

இந்த முறையும் அண்ணாமலையுடன் விவாதத்திற்கு வருவாரா எம்.பி.செந்தில்குமார் அல்லது போன முறை மாதிரி கம்பி நீட்டி விடுவாரா என பொருத்திருந்து பார்ப்போம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News