Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பையில் வைரலாகும் பாகுபலி மோமோ ஸ்வீட்: 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டதாம் !

மும்பையில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் 24 கேரட் தங்கம் 'பாகுபலி மோமோ' சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மும்பையில் வைரலாகும் பாகுபலி மோமோ ஸ்வீட்: 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டதாம் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Oct 2021 2:01 PM GMT

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான உணவுவகைகள், பிரசாதங்கள் பிரபலமானதாக இருக்கும். ஒவ்வொரு ஊரில் உள்ள கடைகளுக்கும் தன்னுடைய கடைகளில் இருக்கும் பொருட்களில் ஏதேனும் செய்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிது புதிதாக அறிமுகம் செய்வார்கள். அந்த வகையில் உணவு பொருட்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அது மக்களை மிகவும் கவர்ந்து விரைவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. அந்த வரிசையில் சமீபத்திய மும்பையில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்த பாகுபலி மோமோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது


இந்த மோமோ தற்போது பிரபலமாகி வருகிறது. அப்படி இதில் என்ன ஸ்பெஷல் என்றால், சுமார் 2 கிலோ எடையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த மோமோவில் தங்க இழை சேர்த்து தயார் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மெஸ்ஸி அடா என்ற கடையில் தான் இந்த பாகுபலி மோமோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற பெண் ஒருவர் தான் இதனை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். எனவே அன்று முதல் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2 கிலோ எடையில் இருப்பதால் இதற்கு பாகுபலி மோமோ என்ற பெயர் சூட்டி உள்ளார்கள்.




அதில், பாகுபலி தங்க மோமோ, இந்தியாவில் முதல்முறையாக 2 கிலோ எடை கொண்ட தங்க இழை கொண்ட மோமோ என்றும், இதில் சீஸ், காய்கறிகள் கொண்டு உட்பகுதியும் 24 கேரட் தங்க இழையால் வெளிப்பகுதி மூடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மோமோஸ் புதினா, ஆரஞ்சு, மோஜிட்டோ என மூன்று வகையான சட்னியுடன் பரிமாறப் படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சுவையான மோமோ அதன் அளவு, தங்க இழையால் மட்டுமல்ல, அதனுடன் வரும் மசாலாப் பொருட்களின் காரணமாகவும் சிறப்பு வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். 7-8 பேர் சேர்ந்து சாப்பிடும் அளவிற்கு தயார் செய்யப்பட்டுள்ள இந்த மோமோ ரூ. 1299 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Input & Image courtesy: News 18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News