Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் இந்து மதக்கடவுளின் சிலைகள் உடைப்பு: மக்கள் போராட்டம்.!

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இந்து மத கடவுளின் சிலைகள் உடைக்கப் பட்டதற்காக இந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் இந்து மதக்கடவுளின் சிலைகள் உடைப்பு: மக்கள் போராட்டம்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Dec 2021 1:18 PM GMT

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமாக இந்து மக்கள் வசித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்களுடைய மத வழிபாட்டு தலங்களில் உள்ள மத கடவுளின் சிலைகள் பெருமளவில் சேதமடைந்து வருகின்றன. இத்தகைய செயல்களில் அங்கு உள்ள முஸ்லிம் இன மக்கள் ஈடுபடுவதாகவும், அந்த பகுதியில் வசிக்கும் இந்து மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருக்கும் ஒரு இந்து கோயிலில் உள்ள மத கடவுளின் சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளன.


இதற்கு அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை அன்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கராச்சியின் உள்ள நரேன்புராவில் நாராயண் மந்திரில் திங்கள்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் இத்தகைய செயல்களில் குறிப்பாக இந்துமதக் கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்தும் செயல்களில் முஹம்மது வலீத் ஷபீர் என்ற நபர் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிய வந்தது உள்ளது.


மேலும் இதனை நேரில் கண்ட சாட்சியாக முகேஷ் குமார் போலீசார் தரப்பில் தெரியப் படுத்தியுள்ளார். அவர் இந்த சம்பவத்தை பற்றி கூறுகையில், "அன்று மாலை அவர் கோயிலில் பிரார்த்தனை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த நபர் சுத்தியலை கொண்டு சிலைகளை சேதப்படுத்தும் காட்சியை தான் நேரில் கண்டதாகவும் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்". மேலும் இந்த பகுதியில் பெரும்பாலும் இந்து மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் இந்து மக்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள இந்துக் கோயிலின் சிலைகளை சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதும், அந்த பகுதி மக்களை போராட்டத்திற்கு தூண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Times of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News