முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போட்ட சிறுவனை கழட்ட சொல்லி கண்டித்த ஆசிரியர் - காழ்ப்புணர்ச்சி காரணமா?
முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருப்பதால் கழுத்தில் மாலை அணிந்தபடியே சென்ற சிறுவனால் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இடையில் கடும் வாக்குவாதம்.
By : Bharathi Latha
நாகர்கோவில் மாநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவரின் செயல் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகி ஏற்படுத்தியிருக்கிறது. இனிமேல் அந்த மாணவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்து வருகிறார். இதற்காக கழுத்தில் மாலை அணிவதோடு, காதில் கம்மல், கழுத்தின் மாலை, காலில் கொலுசு என்று பள்ளிக்கு சென்றுள்ளார். இதனை கண்ட அவருடைய ஆசிரியர் மாணவர் அணிந்திருந்த மாலை மற்றும் கம்மல், கொலுசு ஆகியவற்றை கழட்டி வைத்து பள்ளிக்கு வருமாறு எச்சரித்துள்ளார்.
ஆனால் மாணவனோ விரதம் இருப்பதால் அதனை கழட்ட மறுத்துள்ளார். வகுப்பறையில் இருந்த மாணவரை ஆசிரியர் வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. இது பற்றி மாணவர் தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறார். உடனே மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இதுபற்றி விளக்கம் கேட்டுள்ளார்கள். மேலும் மாணவர் விரதம் இருப்பதால் கம்மல், கொலுசு ஆகியவற்றை அகற்ற முடியாது என்று பெற்றோர் கூறினர்.
இதனால் பெற்றோருக்கும் மற்றும் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. காட்சியை வீடியோவாக பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் ஒரு தரப்பு மாணவரை இப்படி மது சடங்குகளுக்காக பள்ளிக்கு அனுப்புவது மற்ற மதத்தின் இருக்கும் சடங்குகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாக ஏற்படுத்தப் பட்டுள்ளதா? என்று கூறப்படுகிறது.
Input & Image courtesy: News