Kathir News
Begin typing your search above and press return to search.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நாசா வெளியிட்ட கருத்து !

பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா தற்போது கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நாசா வெளியிட்ட கருத்து !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Sep 2021 1:01 PM GMT

தனது அதிகாரப்பூரவ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செப்டம்பர் 5ஆம் தேதி நாசா சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது. அந்தப் புகைப்படங்கள் குறிப்பாக செவ்வாய் கிரகத்தை பற்றியது. ஒரு காலத்தில் இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறிய பெரிய பகுதி என்று கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது அந்த பெரிய நீர் பகுதி முற்றிலும் இல்லாதது போல் காணப்படுகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் காற்று, அரிக்கும் சக்தியை எந்தளவுக்கு வெளிப்படுத்தி வருகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.


நில அரிப்பைப் பற்றி பேசும்போது நாம் வழக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்துக்களை நாசா இதில் குறிப்பிட்டுள்ளது. அதாவது நாசாவின் தற்போதைய கூற்றின் படி, "நீர் மற்றும் எரிமலை ஒரு நிலப்பரப்பில் தங்கள் அடையாளங்களை விட்டுச் செல்வது போல், காற்றும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அரிக்கும் சக்தியை செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் விட்டுச் செல்கின்றன" என்று விளக்கியுள்ளது. மார்ஸ் ஆர்பிட்டரின் சக்திவாய்ந்த உயர்-தெளிவுத்திறன் இமேஜிங் அறிவியல் பரிசோதனை கேமராவைப் பயன்படுத்தி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


மார்ஸ் ஆர்பிட்டர் வெளியிட்ட அந்த படங்கள் பரந்த, ஆழமற்ற குழிகளால் நிரப்பப்பட்ட பாறை நிலத்தின் மேற்பரப்புகளைக் காட்டுகின்றன. மேலும் அழகான வடிவத்தை உருவாக்கும் திசை கோடுகள் அதில் தெரிகின்றன. கோடுகளின் வடிவம் குறிப்பிடத்தக்க வகையில் காற்று வீசும் திசையை குறிக்கும் விதத்தில், காற்று வடிவங்களில் உறைந்திருப்பதைப் போல காணப்பட்டுள்ளன. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு பல்வேறு விதமான கருத்துக்களும் எழுந்து வருகின்றன. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக உள்ளது.

Input & image courtesyHindustan Times



Next Story
கதிர் தொகுப்பு
Trending News