Kathir News
Begin typing your search above and press return to search.

பெயில் வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது.. அலகாபாத் நீதிமன்றம்.!

பெயில் வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது.. அலகாபாத் நீதிமன்றம்.!

பெயில் வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது.. அலகாபாத் நீதிமன்றம்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  7 Nov 2020 7:00 AM GMT

திங்களன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சில நபர்களுக்கு எதிராகத் தவறான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டு ஆண்டுகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடைவிதித்து ஜாமின் வழங்கியுள்ளது.

மேலும் அறிக்கையின் படி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு எதிராகத் தவறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்த அகிலானந்த் என்ற வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சித்தார்த் அமர்வு ஜாமின் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாமின் வழங்கும் போது நீதிபதி, "விண்ணப்பதாரர் இரண்டு ஆண்டுகள் அல்லது விசாரணையின் தீர்ப்பு வழங்கும் வரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகின்றது," என்று கூறினார்.

மேலும் உத்தரப் பிரதேச காவல்துறை அகிலானந்த் மீது இந்தியத் தண்டனை சட்டம் 419, 420, 120B கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66D கீழும் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இருப்பினும் குற்றவாளிக்கு ஆஜரான வக்கீல் விமல் குமார் பாண்டே குற்றவாளி மீது காவல்துறையினர் பதிவுசெய்துள்ள புகார்கள் தவறானவை என்று வாதிட்டார்.

மேலும் மே 12 முதல் குற்றவாளி சிறையில் இருப்பதையும் நீதிமன்றம் பதிவு செய்தது. ஜாமின் கோரிய மனுதாரர் மீது 11 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை முன்வைத்து விண்ணப்பதாரரை ஜாமினில் விட உத்தரவிட்டது. மேலும் நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. விசாரணைகளின் போது சாட்சிகளை அச்சுறுவது மற்றும் அதனை அளிக்க விண்ணப்பதாரர் முயல மாட்டார் என்றும் தெரிவித்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News