Kathir News
Begin typing your search above and press return to search.

அடிப்படை கூட தெரியாமல் கருத்து தெரிவித்த நடிகர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!

அடிப்படை கூட தெரியாமல் கருத்து தெரிவித்த நடிகர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!

அடிப்படை கூட தெரியாமல் கருத்து தெரிவித்த நடிகர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  7 Feb 2021 6:20 PM GMT

நடிகர் சித்தார்த், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனும் பெயரில் தவறான தகவல்களை பரப்பி வருவதற்கு, நெட்டிசன்கள் விளக்கம் கொடுத்து, பாடம் எடுத்து வருகிறார்கள்.

தங்களுக்கு பரிச்சயமோ / விவரமோ தெரியாத விவகாரங்களில் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது சமூக வலைதளங்களில் புதிய விஷயமல்ல. என்ன கருத்து சொன்னாலும் அதற்கு ஆரவாரம் செய்ய ரசிகர் கூட்டம் இருக்கும் போது தங்களை அறிவுஜீவி போல நினைத்துக் கொள்வது சகஜமே. ஆனால் அத்தகைய பேச்சுகள் வன்முறையை, தவறான தகவல்களை பரப்பும் பட்சத்தில் கொஞ்சம் பின்வாங்குவதே சிறந்தது. ஆனால் சிலர் இதை ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் நலனுக்கு விரோதமான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் தான் நடிகர் சித்தார்த். ரங் தே பாஸந்தி போன்ற புரட்சி படங்களில் நடித்ததாலோ என்னவோ, ட்விட்டரில் காரண காரியம் இல்லாமல் அரசாங்கத்தை எதிர்த்து ட்வீட் செய்வது ஒன்றையே புரட்சி என நினைத்து வருகிறார். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்திய விவசாய சீர்திருத்தங்கள் - இந்திய விவசாயிகளால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டவை. சில மாநிலங்களை சேர்ந்த இடைத்தரகர்களும், காலிஸ்தானிகளும், அவர்களால் தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகளும் போராடி வருகின்றனர்.

இதைக்குறித்து இன்று ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் தான் கோதுமை ரொட்டி சாப்பிட்டதாகவும், அது மிகவும் சுவையாக இருந்தது என்று விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு விவசாயி இறந்தால், நாம் அனைவரும் இருக்கிறோம், ஒரு விவசாயி போராடினால் நாம் அனைவரும் போராட வேண்டும்..விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருளின் விலையை தாங்களே நிர்ணயிக்க வேண்டும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.


அவர் கூறிய கடைசி வரியை தான் விவசாய சட்டங்கள் செய்ய முயல்கிறது. தங்கள் விளைபொருளுக்கான விலையை காண்ட்ராக்ட் ஒப்பந்தத்தின் மூலம் தாங்களே நிர்ணயித்து தாங்கள் விரும்பியவர்களிடத்தில் லாபத்திற்கு விற்கும் உரிமையை இச்சட்டங்கள் வழங்குகிறது. அச்சட்டங்களையே எதிர்த்துக் கொண்டு, அதில் இருக்கும் உரிமை வேண்டும் எனக் கேட்பது முரண்.



விவசாயிகள் ஒப்பந்தத்தில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட விற்பனை விலையில், தங்கள் வாய்ப்பில் விளைபொருட்களை விற்கலாம். அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் அவர்கள் விற்பனை தொகையை பெறுவார்கள்.

பயிரை பயிரிடுவதற்கு முன்பே அதனுடைய விலையை விவசாயிகளால் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். அதிகபட்ச ஏற்ற இறக்கம் இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்ச விலையை விட அதிக விலை கேட்க விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது.

இதைப் பல நெட்டிசன்களும் சித்தார்த்திடம் சுட்டிக் காட்டி வெளுத்து வாங்கினர். அதற்கெல்லாம் அவரிடத்தில் இருந்து பதில் இல்லை.

Cover Image Credit: The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News