ஸ்டெர்லைட் காப்பர் பற்றி அறியாத உண்மைகள்: அறிமுகமாகிய டிஜிட்டல் தொழில்நுட்பம்!
ஸ்டெர்லைட் காப்பர் பற்றி இதுவரை மக்கள் அறிந்திராத உண்மைகளை விளக்குவதற்கான புதிய தொழில்நுட்பம்.
By : Bharathi Latha
தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் மக்களின் ஆதரவுடன் நல்லமுறையில் தான் இயங்கி வந்தது. இருந்தாலும் சில போராட்டக்காரர்களின் சூழ்ச்சியினால் மக்கள் ஸ்டெர்லைட் காப்பர் பற்றி தவறாக புரிந்துகொண்டு அவற்றை மூடுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். இதன்காரணமாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் தற்பொழுது மக்கள் அவற்றை மீண்டும் திறப்பது தான் எங்களுடைய விருப்பம் என்று கூறுகிறார்கள் தூத்துக்குடி மக்கள். எனவே ஸ்டெர்லைட் காப்பர் பற்றிய பல்வேறு நபர்களுக்கு தெரியாத உண்மைகளைக் கண்டறிவதற்கான புதிய டெக்னாலஜி தொழில்நுட்பத்தை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் அவற்றின் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டெர்லைட் காப்பர் இன் தாமிரம் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது போன்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இது பற்றி சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி மையம் கூறுகையில், சல்பர் டை ஆக்சைடு தான் புற்றுநோய் ஏற்படுவதாக காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தூத்துக்குடியில் உள்ள மக்களின் புற்றுநோய்க்கு தாமிர உற்பத்தி காரணமாக இருக்காது என்றும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ஸ்டெர்லைட் காப்பர் ஆலை கந்தக டை ஆக்சைடுகள், கந்தக அமிலமாக மாற்றுகிறது. இதற்கு SO2 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது காற்று மாசுபாடு ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை.
மழை அளவிற்கும் ஆலை தான் காரணம் என்பது மாதிரி கூறப்படுகிறது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இதுபற்றிக் கூறுகையில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலைற்கும் அங்கு பொழியும் மழை அளவிற்கும் சம்பந்தம் இருப்பதாக அவர்கள் கூறவில்லை. மேலும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் முத்துச்சரம் என்ற திட்டமும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திின் வேதாந்தா என்பதன் மூலம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தூத்துக்குடியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை நீங்கள் அறியாத தகவல்களை அறிந்து கொள்வதற்கு மேலும் www.sterlitecopperfacts.in என்ற வெப்சைட் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Input & Image courtesy: sterlitecopperfacts