Kathir News
Begin typing your search above and press return to search.

நினைத்த நேரத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதற்கு புதிய வசதி.!

நினைத்த நேரத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதற்கு புதிய வசதி.!

நினைத்த நேரத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதற்கு புதிய வசதி.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Nov 2020 11:48 PM IST

உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சரியாக 12 மணிக்கு சொல்லவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். திடீரென வேலையின் காரணமாக அதை மறந்துவிடுகிறீர்களா? அல்லது சரியான நேரத்தில் மெசேஜ்களை அனுப்ப முடியாமல் போகிறதா? இனிமேல் நீங்கள் நேரத்தைத் தவறவிடுவது பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை.

ஏனென்றால் ஒரு சிறப்பான மூன்றாம் தரப்பு செயலியான 'SKEDit' ஐப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த செயலியின் மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை சரியான நேரத்திற்கு அனுப்ப திட்டமிட முடியும். அது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் பிளே ஸ்டோருக்குச் சென்று SKEDit என்ற செயலியைத் தேடி இன்ஸ்டால் செய்யவும். பின்னர் SKEDit செயலியில் லாகின் செய்யவும். SKEDit செயலியை லாக்இன் செய்த பிறகு, மெயின் மெனுவுக்குச் சென்று வாட்ஸ்அப் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

இதற்குப் பிறகு, SKEDit உதவியுடன், நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியைச் சேர்த்து, பின்னர் செய்தியை அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை திட்டமிடுங்கள். மீண்டும் மீண்டும் செய்வதற்கான விருப்பமும் உள்ளது. இதன் உதவியுடன் நீங்கள் செய்திகளை மீண்டும் மீண்டும் அனுப்பவும் முடியும்.

ஆப் ஸ்டோருக்குச் சென்று ShortCuts செயலியைப் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும். பின்னர் செயலியைத் திறக்கவும். ஆட்டோமேஷன் என்னும் ஆப்ஷனை கீழ் வலதுபுறமாகக் காண்பீர்கள். தனிப்பட்ட ஆட்டோமேஷனை உருவாக்கு + ஐகானைக் கிளிக் செய்க. இதற்குப் பிறகு, அடுத்த திரையில் டைம் ஆட்டோமேஷன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

செய்திகளைத் திட்டமிட அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். தேடல் பட்டியில் ஆக்சன் என்பதைக் கிளிக் செய்து, பட்டியலில் தோன்றும் உரையைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு நீங்கள் Send Message via WhatsApp என்பதைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்து நெக்ஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்க. இதற்குப் பிறகு, அடுத்த திரையில் நீங்கள் டன் என்ற பட்டனைக் காண்பீர்கள்.

அதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தி திட்டமிடப்படும். அவ்வளவுதான் இதன் மூலம் நீங்கள் வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு எந்த நேரத்தில் செய்தி அனுப்ப வேண்டுமோ அந்த நேரத்தைத் தேர்வு செய்து அனுப்பலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News