Kathir News
Begin typing your search above and press return to search.

வாட்ஸ் அப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்.!

வாட்ஸ் அப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்.!

வாட்ஸ் அப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Dec 2020 4:00 PM GMT

வாட்ஸ்அப்பின் மொபைல் பதிப்பு வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. ஆனால் வெப் பதிப்பு இன்னும் அதற்கான ஆதரவைப் பெறவில்லை.

வலைபதிப்பிற்கான வீடியோ அழைப்பு அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வருவதாகவும், இது விரைவில் பயனர்களுக்குக் கிடைக்கக்கூடும் என்றும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போதைக்கு, வீடியோ அழைப்புக்கு நீங்கள் மெசஞ்சர் ரூம்களைப் பயன்படுத்தலாம். இது உடனடியாக அணுகக்கூடியது. மேலும் இதற்காக உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைய தேவையில்லை.

வாட்ஸ்அப் மொபைல் எட்டு பங்கேற்பாளர்களை மட்டுமே ஆதரிக்கிறது. இதனால் குறைவான இடத்தை கொண்டு மீட்டிங் நடத்த வேண்டிய கட்டாயம் எரிச்சலூட்டும் விதமாக அமைகிறது. அதிர்ஷ்டவசமாக, வாட்ஸ்அப்பின் மொபைல் பதிப்பைப் போலன்றி, குரூப் அழைப்பில் 50 பங்கேற்பாளர்களைச் சேர்க்க மெசஞ்சர் ரூம்கள் உங்களை அனுமதிக்கின்றன. மெசஞ்சர் ரூம்களைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் நண்பர்களுடன் வீடியோ அழைப்பை எவ்வாறு செய்யலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் வெப்பை திறந்து உங்கள் கணக்கில் உள்நுழையுங்கள். மேல் இடது மூலையில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகான் உள்ளது. அதை நீங்கள் கிளிக் செய்து பின்னர் ‘கிரியேட்எ ரூம்'என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். ‘கண்டினியூ இன் மெசஞ்சர்’ என்று ஒரு மெசேஜ் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் பேஸ்புக் கணக்கு ஏற்கனவே திறந்திருந்தால், நீங்கள் உள்நுழைய தேவையில்லை. உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒரு ரூமை உருவாக்க பேஸ்புக் தானாகவே உங்களை அனுமதிக்கும். நீங்கள் ‘கிரியேட் எ ரூம் ஆஸ் XXXX’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் வீடியோ அழைப்பைத் தொடங்கலாம்.

நீங்கள் இப்போது உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பு இணைப்பைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடன் சேரச் சொல்லலாம். லாகின் விவரங்களை பேஸ்புக் ஹோஸ்ட் மட்டுமே பதிவு செய்தால் போதும், மீதமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் கணக்கு விவரங்களை உள்ளிட தேவையில்லை என்பதையும் நினைவில் கொள்க. ஒருவருக்கு பேஸ்புக் கணக்கு அல்லது மொபைல் பயன்பாடு இல்லை என்றால், அவர்கள் குழு அழைப்பிலும் சேரலாம்.

கூடுதலாக, ஸ்மார்ட்போன் மற்றும் பிசி இரண்டிலும் மெசஞ்சர் ரூம்களைப் பயன்படுத்தலாம். இதன் சிறந்த பகுதியாக நீங்கள் 50 பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம். இதற்கு பேஸ்புக் உங்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்காது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News