Kathir News
Begin typing your search above and press return to search.

திரைப்பட திருட்டை தடுக்க புது வழி.. பெரிய அளவில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..

திரைப்பட திருட்டை தடுக்க புது வழி.. பெரிய அளவில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Nov 2023 2:39 AM GMT

பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் திரைப்பட திருட்டு வெளியீடுகளைத் தடுக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிப்புரிமைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கையைத் தவிர, திரைப்படத் திருட்டு உள்ளடக்கத்தின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க எந்த செயல்முறையும் இப்போதைக்கு இல்லை. இணையதள வசதிகள் பெருகியதாலும், திரைப்பட உள்ளடக்கத்தை இலவசமாகப் பார்க்க கிட்டத்தட்ட அனைவரும் ஆர்வமாக இருப்பதாலும், திரைப்படத் திருட்டு வெளியீடு அதிகரித்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கையானது திரைப்படத் திருட்டு வெளியீடு நடந்தால் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும். இது திரைபடத் தொழில்துறைக்கு நிவாரணம் அளிக்கும்.


இந்த சட்டத் திருத்தம் குறித்துப் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், திரைப்படத் திருட்டு வெளியீடுகளால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது என்றார். ஒரு திரைப்படத்தை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும் முயற்சி திருட்டால் வீணாகிறது என்றும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது எனவும் அவர் கூறினார். இது திரைப் படத்தொழில் துறையினரிடையே பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 1984 ஆம் ஆண்டில் கடைசியாக குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.


அசல் பதிப்புரிமை வைத்திருப்பவர் அல்லது இந்த நோக்கத்திற்காக அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நபரும் திருட்டு உள்ளடக்கத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். பதிப்புரிமை இல்லாத அல்லது உரிமையாளரால் அங்கீகரிக்கப்படாத ஒரு நபரால் புகார் எழுப்பப்பட்டால், புகாரின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க ஒருங்கிணைப்பு அதிகாரி விசாரணைகளை நடத்தலாம்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News