Kathir News
Begin typing your search above and press return to search.

பிற மதப் பெண்களை விபச்சாரிகள் என்ற ஊடகவியலாளர் - நடவடிக்கை எடுத்த செய்தி நிறுவனம்.!

பிற மதப் பெண்களை விபச்சாரிகள் என்ற ஊடகவியலாளர் - நடவடிக்கை எடுத்த செய்தி நிறுவனம்.!

பிற மதப் பெண்களை விபச்சாரிகள் என்ற ஊடகவியலாளர் - நடவடிக்கை எடுத்த செய்தி நிறுவனம்.!
X

Shiva VBy : Shiva V

  |  15 Dec 2020 8:53 AM GMT

இலங்கை‌ தலைநகர் கொழும்புவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை இழிவாக பேசும் விதமாக பதிவிட்ட தால் அவரை பணியிடை நீக்கம் செய்து அந்த தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஸ்லுல்லாஹ் முபாரக் என்னும் முஸ்லிம் இளைஞர் கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது முகநூல் பக்கத்தில், "ஒரு மாற்று மத நண்பர் ஒருவர் என்னிடம் ஏன் இஸ்லாமிய பெண்கள் உடல் முழுவதும் மறைத்தவாறு ஆடை அணிகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு மறைக்க வேண்டியதை மறைத்தால் தான் அவள் பெண். மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருந்தால் அதற்குப் பெயர் பெண்ணல்ல விபச்சாரம் என்றேன் அவர் பதிலேதும் கூறாமல் யோசித்தார்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவில் அவர் சிங்கள, இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இந்த பதிவு அந்நாட்டில் உள்ள அனைத்து இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இவர் நியூஸ் 1/ சக்தி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊடகவியலாளராகப் பணி புரிந்து வருகிறார்.

அவரது பதிவு இந்து, கிறிஸ்தவ மற்றும் சிங்கள சமூகத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் பணிபுரிந்து வந்த சக்தி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் அவரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் பதிவிட்ட செய்தியை வைத்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்துக்கள் மத நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் பிற மதத்தினர் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு அவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.

இந்தியாவிலும் முஸ்லிம்கள் சிலர் இவ்வாறு பேசி, பதிவிட்ட போதும், சிறுபான்மையினர் என்ற பெயரில் அவர்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் இது போன்று மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News