ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணி: அடுத்து வந்த ஆச்சரியமூட்டும் போன் கால் !
ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணி பாராட்டு தெரிவித்த இந்திய பிரதமர்.
By : Bharathi Latha
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. மிகவும் கடுமையான முறையில் போராடி இறுதிக் கட்டத்திற்கு முன்னேறி ஆண்கள் ஹாக்கி அணி தற்போது இந்திய நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்து உள்ளது. எனவே அவர்களுடைய வெற்றிக்குப் பிறகு ஆண்கள் ஹாக்கி அணிக்கு, "ஆச்சரிய அழைப்பாளர்" இடம் இருந்து ஒரு போன் கால் வந்தது. அது வேறு யாருமில்லை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இடம் இதுதான் அந்த ஆச்சரிய அழைப்பு வந்துள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியுடன் போன் காலில் பேசும் வீடியோக்கள் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த வெற்றி சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி முதல் ஒலிம்பிக் ஹாக்கிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த உள்ளார்கள்.
அவர்களின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் நரேந்திர மோடி அவர்கள். அந்த வீடியோவில் ஸ்பீக்கருடன் தொலைபேசியை வைத்திருந்த மன்பிரீத் சிங், 'நமஸ்கர் சார்' என்கிறார். பிரதமர் மோடி, மறுபுறம், 'வாழ்த்துக்கள்' என்று இந்தியில் சொல்வதைக் கேட்கலாம். இந்த குழு டோக்கியோவில் சிறப்பான பணியை செய்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் அவர் பேசுகையில், "உங்களுக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள் முழு நாடும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் பயிற்சியாளர் ரீட், நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். எனது வாழ்த்துக்கள் உங்களுடன் உள்ளது" என்று பிரதமர் மோடி அவர்கள் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Image courtesy: NDTV news