உடல் உறுப்பு தானம் செய்து 3 பேர் உயிரைக் காப்பாற்றிய முதியவர் குடும்பம் !
52 வயதில் மூளைச்சாவு அடைந்த முதியோரின் குடும்பம் உடல் உறுப்பு தானம் மூலம் 3 பேர் உயிரை காப்பாற்றியுள்ளது.
By : Bharathi Latha
சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த 52 வயதான ஒருவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளார். 52 வயதான நபர் தனது வலது பக்க பலவீனத்தின் குறைபாட்டால், மந்தமான பேச்சால் அவதிப்பட்டார். MRI பரிசோதனையில், உள் மூளை இரத்தப்போக்கு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. நோயாளிக்கு வென்டிலேட்டர் கொடுக்கப்பட்டும் பயனளிக்கவில்லை.பிறகு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பமும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டது.
இதன்படி முதியவரின் உடல் உறுப்பு பாகங்களான சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் மூன்று பேருக்கு பொறுத்தப்பது. சிறுநீரகங்களில் ஒன்று FMRIயில் 60 வயது பெண்ணுக்கு உறுப்பு மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாவது சிறுநீரகம் டெல்லியில் 51 வயது பெண் மற்றும் கல்லீரல் டெல்லியில் உள்ள 54 வயது ஆணுக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் அனில் மந்தானி கூறுகையில், "உடல் உறுப்பு தானத்தின் மதிப்பை உணர்ந்து, பல நோயுற்ற நோயாளிகளுக்கு உயிர் கொடுத்ததற்காக, இறந்த நன்கொடையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மரணத்திற்குப் பின் உயிரைக் கொடுக்கும். இந்த உன்னதச் செயலில் நாம் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்தியாவில் உடல் உறுப்புகளின் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3 பேர் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். உடல் உறுப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் பல்வேறு மக்கள் இறந்து போகின்றனர். நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற கிட்டதட்ட 5 லட்சம் பேர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், அரை மில்லியன் இந்தியர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பொருத்தமான நன்கொடையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை.
Input & Image courtesy: News 18