Kathir News
Begin typing your search above and press return to search.

ராம் ஜான்கி கோவில் பாபா பிரியாணிக்கடையாக மாறியது - அடித்து தூரத்தப்பட்ட 18 இந்து குடும்பங்கள்!

ராம் ஜான்கி கோவில் பாபா பிரியாணிக்கடையாக மாறியது - அடித்து தூரத்தப்பட்ட 18 இந்து குடும்பங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2022 11:45 AM GMT

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெகோங்கஞ்ச் பகுதியில் ராம் ஜான்கி கோவில் நிலத்தை 1980-களில் முக்தர் பாபா என்ற நபருக்கு பாகிஸ்தானியர் ஒருவர் விற்றதை கான்பூர் நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது . கோவில் தளத்தில் பாபா பிரியாணி கடை செயல்படுகிறது. கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட உணவகம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது எதிரி சொத்து சட்டம் 1968ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி நாளிதழான ஜாக்ரன் கூறுகையில் , கோயில் முழுவதும் அழிக்கப்பட்டு 'பாபா பிரியாணி' உணவகமாக மாற்றப்பட்டது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த போதிலும், கோயிலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே அந்த இடத்தில் உள்ளது. கோயிலின் மீதமுள்ள பகுதி முக்தார் பாபாவின் உணவகத்தின் சமையலறை பகுதியின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. முக்தார் பாபா 18 இந்துக் குடும்பங்களை கோவில் வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகளை இடித்துவிட்டு, முழுப் பகுதியையும் சூழ்ந்திருக்கும் வகையில் தனது உணவகத்தை விரிவுபடுத்தினார்.

கான்பூர் நிர்வாகம் எதிரி சொத்துக்களை நகரத்தில் உள்ளதா என தேடிய போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோவில் சொத்துக்களை 'எதிரி சொத்தாக' சேர்க்கும் நடவடிக்கையை துவக்கியுள்ளது. எதிரி சொத்து சட்டத்தின் கீழ் உணவகம் விரைவில் இடிக்கப்படும் என்று பாபா பிரியாணி உணவக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஊடக அறிக்கையின்படி , 1982 ஆம் ஆண்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த அபித் ரெஹ்மான், கான்பூரில் உள்ள கோயில் வளாகத்தில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்த முக்தர் பாபா ஒருவருக்கு கோயில் சொத்துக்களை விற்றார். ரெஹ்மான் 1962 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவரது குடும்பம் ஏற்கனவே வசித்து வந்தது. அவர் சொத்தை முக்தார் பாபாவுக்கு விற்க சிறிது நேரம் திரும்பினார். கோவில் நிலத்தை கையகப்படுத்திய முக்தார் பாபா, 18 இந்துக் குடும்பங்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றி, பின்னர் கோவில் அமைப்பை இடித்து அசைவ ஹோட்டலைக் கட்டினார்.

கடந்த ஆண்டு முக்தார் பாபா மீது சத்ரு சம்பாதி சன்ரக்ஷன் சங்கர்ஷ் சமிதி புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போதைய மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு இணை மாஜிஸ்திரேட்டிடம் கேட்டார். அறிக்கை பின்னர் எதிரி சொத்துக் காப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. கான்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் பதிவுகள், சொத்து இன்னும் கோயிலாகப் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன.

தற்போது கோவில் சொத்துக்களை 'எதிரி' சொத்தாக சேர்க்கும் நடவடிக்கையை, எதிரி சொத்து பாதுகாவலர் அலுவலகம் துவங்கியுள்ளது. கோவிலை விலைக்கு வாங்கி அதை இடித்து உணவகமாக மாற்றியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முக்தார் பாபுவின் மகன் மெஹ்மூத் உமர், அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும், எதிரி சொத்துக் காவலர் துறை முக்தார் பாபாவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு விரைவில் பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News