Kathir News
Begin typing your search above and press return to search.

"சிலைகளைக் காலால் எட்டி உதைத்தேன்" - 699 கிராமங்களை மதம் மாற்றியதாக தம்பட்டம் அடித்த போதகர் கைது!

"சிலைகளைக் காலால் எட்டி உதைத்தேன்" - 699 கிராமங்களை மதம் மாற்றியதாக தம்பட்டம் அடித்த போதகர் கைது!

சிலைகளைக் காலால் எட்டி உதைத்தேன் - 699 கிராமங்களை மதம் மாற்றியதாக தம்பட்டம் அடித்த போதகர் கைது!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  15 Jan 2021 11:07 AM GMT

ஆந்திராவில் ஒரு பக்கம் தொடர்ந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் பயந்து வரும் நிலையில், இதற்கு காரணமான இந்து மதம் மீது வெறுப்பைப் பரப்பும் கிறிஸ்தவ மிஷனரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்து கடவுள் சிலைகளை எட்டி உதைத்ததாகவும், இந்துக்களை மதம் மாற்றி 'கிறிஸ்து கிராமங்களை' ஏற்படுத்தி வருவதாகவும் தம்பட்டம் அடித்து பிரவீண் சக்கரவர்த்தி என்ற மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘Sylom Blind Centre’ என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிரவீண் சக்கரவர்த்தி, அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று மத மாற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தானும் தனது சக மத போதகர்களும் ஆந்திராவில் பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும் அவ்வாறு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரையுமே மாற்றி விட்டால் அதற்கு 'கிறிஸ்து கிராமம்' என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.

மக்களை மதம் மாற்றிய பின் அவர்களது வீடுகள், கோவில்களில் உள்ள சிலைகளை காலால் எட்டி உதைத்து அவர்களையும் உதைக்கச் சொல்வதாகவும் பெருமையாகப் பேசி இருந்தார். இந்த வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டே சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது Legal Rights Protection Forum என்ற தன்னார்வ அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரவீண் சக்கரவர்த்தி குறித்து புகார் அனுப்பியது.

இந்த வருடம் வெளிநாட்டு நன்கொடையாளரிடம் பிரவீண் பேசும் வீடியோ ஒன்றை Legal Rights Protection Forum வெளியிட்டது. அதில் தன்னுடன் 3642 மதபோதகர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இது வரை 699 'கிறிஸ்து கிராமங்களை' ஏற்படுத்தி உள்ளதாகவும் தம்பட்டம் அடிப்பதைப் பார்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து குண்டூரைச் சேர்ந்த சிங்கம் லக்ஷ்மி நாராயணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆந்திர CID பிரிவு போலீசார் பிரவீண் சக்கரவர்த்தியைக் கைது செய்துள்ளனர்.

CID தலைமை அதிகாரி சுனில் குமார் ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போற்றியும் பேசிய வீடியோ வைரலான நிலையில் இந்தக் கைது நடந்திருக்கிறது. சுனில் குமார் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மத போதகர் பிரவீண் சக்கரவர்த்தி மீது சட்டரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

பிரவீண் சக்கரவர்த்தியின் ‘Sylom Blind Centre’ அமைப்பு இந்தியாவில் 'அடிமைத் தளையில்' கட்டுண்டு இருக்கும் குழந்தைகளை மீட்பதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் நிதி பெற்றுள்ளது. ஆனால் இது குறித்து மாநில, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவு அடிமைகள் இருக்கும் நாடு என்ற பிம்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் இந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று ஊரடங்கு சமயத்தில் குழந்தைகளை கொத்தடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதாக பிரவீண் சக்கரவர்த்தி எடுத்த நடவடிக்கையின் விளைவாக 318 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த குழந்தைகளை மீட்பதற்காக என்று வெளிநாடுகளில் இருந்து ₹93 கேடி வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதியாகப் பெற்றது குறித்து விசாரணை செய்யுமாறு விசாரணை அமைப்புக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News