Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Sep 2022 2:35 AM GMT

கோவையில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பா.ஜ.கவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் மற்றும் RSS அமைப்பின் முக்கிய பகுதி பதவியில் இருப்பவர்கள் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இதன் காரணமாக சட்ட ஒழுங்கு தற்பொழுது சீர்குலைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்காக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் கோவைக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


மேலும் இது தொடர்பாக சைலேந்திரபாபு அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தொடர் கொண்டு பெட்ரோல் குண்டு வெட்டி கொண்டவன் குறித்து விடமாட்ட ஆலோசனை மேற்கொள்ள கூடிய அளவுக்கு சூழலில் இல்லை. எனவே தற்போது சம்பவம் நடைபெற்ற மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் முக்கிய குற்றவாளிகள் அகப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் நிச்சயம் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


NIA சோதனைக்குப் பிறகு தமிழகத்தில் கோவை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.கவை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக பாரத ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது மட்டும்தான் நடைபெற்று வருவதாகவும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Dinamani news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News