Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை: மாணவர்கள் பின்னணியில் PFI அமைப்பு உள்ளதா?

ஹிஜாப் பிரச்சனையில் மாணவர்கள் பின்னணியில் PFI அமைப்பு உள்ளது.

கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை: மாணவர்கள் பின்னணியில் PFI அமைப்பு உள்ளதா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Feb 2022 2:23 PM GMT

தற்போது கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனைக்கு மாணவர்கள் பின்னணியில் PFI மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் ஆதரவு பெற்ற முஸ்லிம் மாணவர்கள், சீருடை அணிவது தொடர்பான விதிகளை மீறி, வகுப்பறைக்குள் இஸ்லாமிய உடையான புர்காவை அணிய வலியுறுத்தி கல்வி நிலையங்களில் சூழலை சீர் குறைப்பதற்காக இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சீருடை விதிமுறைகளுக்கு எதிராக போராடும் முஸ்லிம் மாணவர்கள் தீவிர இஸ்லாமிய அமைப்பான PFI உடன் தொடர்பு கொண்டிருந்தனர். கல்லூரி விதிப்புத்தகத்தில் ஹிஜாபை தடைசெய்வதற்கு குறிப்பிட்ட விதி எதுவும் இல்லை என்பதை உணர்ந்த மாணவர்கள், 2021 டிசம்பரில் தான் கல்லூரியில் ஹிஜாப் அணிய ஆரம்பித்ததாக ஒப்புக்கொண்டனர்.


மேலும் இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், "ஆரம்பத்தில், நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது, ​​​​எங்கள் பெற்றோர்கள் ஹிஜாபைத் தடைசெய்த ஒரு படிவத்தில் கையெழுத்திட்டார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அந்த படிவம் இருந்தாலும், அதில் ஹிஜாப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, எங்கள் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தை மூன்று முறை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த பதிலும் வராததால் பள்ளியில் ஹிஜாப் அணிய முடிவு செய்தோம். இது டிசம்பரில் (2021) நடந்தது" என்று மாணவர்களில் ஒருவர்தான் கூறினார். எனவே டிசம்பரில் தான் மாணவர்கள் இப்படி ஹிஜாப் அணிய ஆரம்பித்து உள்ளார்கள்.


ஹிஜாப் அணிவதால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் பின்னணியில் கர்நாடகாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் இதுபற்றி கூறுகையில், "முஸ்லீம்களுக்கு ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது" என்றும் கூறினார். கல்வி நிறுவனங்களில் நடக்கும் பெண்கள் போராட்டங்களில் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) பங்கு இருக்கிறதா என்பது? குறித்தும் ஆராய்கின்றனர் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News