Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மிக சுற்றுலா... மத்திய அரசின் இலக்கு இதுதான்... பிரதமர் திட்ட வட்டம்!

ஆன்மிக சுற்றுலாவை மேம்பாடு அடைய செய்வதே மத்திய அரசின் இலக்கு.

ஆன்மிக சுற்றுலா... மத்திய அரசின் இலக்கு இதுதான்... பிரதமர் திட்ட வட்டம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Jun 2023 2:24 AM GMT

G20 நாடுகளில் சுற்றுலா அமைச்சர்களின் கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது சுற்றுலாத்துறையில் உலகளவில் இரண்டு டிரில்லியன் டாலருக்கும் மேல் கையாண்டுக் கொண்டிருந்தாலும், சுற்றுலா அமைச்சர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் என்பதற்காக மட்டும் கோவாவில் ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், அமைச்சர்கள் இங்கு நடத்தப்படும் ஆலோசனைகளுக்கு இடையே கோவாவின் இயற்கை அழகையும், ஆன்மிக பயணத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


சுற்றுலாத்துறையில் இந்தியாவின் அணுகுமுறை, நமது பாரம்பரிய சமஸ்கிருத வார்த்தையான அதிதி தேவோ பவா என்பதன் அர்த்தமான விருந்தினரே கடவுள் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிட்டார். சுற்றுலா என்பது தளங்களைப் பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல் புதுவிதமான அனுபவங்களையும் அளிக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். இசை அல்லது உணவு, கலை அல்லது கலாச்சாரம் என எதுவாக இருந்தாலும் இந்தியாவின் பன்முகத்தன்மை உண்மையில் கம்பீரமானது என்று அவர் கூறினார்.

உயரமான இமயம் முதல் அடர்த்தியான வனப்பகுதி வரை, வறண்ட பாலைவனம் முதல் எழில் மிகுந்த கடற்கரை வரை, சாகச விளையாட்டு முதல் தியானம் வரை, என அனைவருக்கும் இந்தியா ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறது என்றார். ஜி20 தலைமைத்துவ காலத்தில் சுமார் 200 கூட்டங்களை நாடு முழுவதும் நடத்த உள்ளதாகக் கூறிய அவர், இந்தக் கூட்டங்களில் மாறுபட்ட அனுபவங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


உலக சுற்றுலாத்துறையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன் நம்முடைய தொன்மை வாய்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதை மையப்படுத்தியே இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக கூறிய பிரதமர், ஆன்மிக சுற்றுலாவை மேம்பாடு அடைய செய்வதே மத்திய அரசின் இலக்குகளில் ஒன்றாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News