பிரதான் மந்திரி திட்டத்தில் பயனடைந்த தமிழக விவசாயியை பாராட்டிய பிரதமர் மோடி!
பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ், பயனடைந்த தமிழக விவசாயியை பாராட்டிய மோடி.
By : Bharathi Latha
பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில், நேற்று பேசிய அவர் இந்திய தனது பாரம்பரிய அனுபவங்களை நவீன அறிவியலுடன் இணைந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் நம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறோம். வளர்ந்த நாடுகளை காட்டிலும் நாம் சூரிய மின் சக்தியை எதிர்காலமாக பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த வாரம் மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக விவசாயி பற்றி பாராட்டி இருக்கிறார்.
பிரதமரின் நரேந்திர மோடி அவர்கள் கூறும் பொழுது பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டம் பற்றி எடுத்துரைத்தார். இந்த திட்டத்தின் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த எழிலன் என்ற விவசாயி பயன்பெற்று இருப்பதாக தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் எழிலன் என்ற விவசாயி இருக்கிறார். அவர் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளார். தனது வயலில் அவர் 10 குதிரை சக்தி திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட் பொருத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு செலவுகள் குறைந்துள்ளது வருமானம் அதிகரித்து கொள்வது என தெரிவித்தார்.
விவசாயிகளும் தற்போது சூரிய மின்சக்தி திட்டத்தில் அதிகமாக பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய அரசு சூரிய மின்சக்தி திட்டத்தின் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி பயனடைந்திருப்பதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகிறார். இதுபோன்ற ராஜஸ்தானிலும் இரண்டு விவசாயிகள் சூரியன் உச்சக்தியால் இயங்கும் பம்ப் செட் பொருத்தி செலவுகளை குறைத்து அதிக வருமானத்தை பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு தொழில்கள் பல இந்த சூரிய மின்சக்தி திட்டத்தில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News 18