தந்தையை இழந்த 551 பெண்களின் திருமண விழா நிகழ்ச்சி - பிரதமர் மோடி பங்கேற்பு!
பாபா நி பாரி என்ற சமுதாய திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
By : Bharathi Latha
குஜராத் மாநிலம் பாவ் நகரில் நடைபெற்ற அனைத்து சமூகங்களை சேர்ந்த 551 ஜோடிகளின் பொது திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் குஜராத் மாநிலம் சென்றிருந்தார் இந்த விழாவில் திருமணம் செய்து கொண்ட பாப்பா நி பாரி என்ற மணப்பெண்கள் அனைவரும் தந்தையை இழந்தவர்கள். இதுபோன்ற முயற்சிகளுக்கு பின்னால் உள்ள சமூக சேவை குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
பணத்தை சேமிப்பதற்கான சமுதாய திருமணங்களை நடத்தும் யோசனையை குஜராத் மாநில அரசு எவ்வாறு ஈர்க்க தொடங்கியது என்பதை அப்பொழுது அவர் நினைவு கூர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே குஜராத் மாநிலம் பாவனாகரில் நடைபெற்ற பாப்பா நி பாரி என்று சமூக திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 551 புதுமான தம்பதிகளை ஆசீர்வதித்தார். பின்னர் அவர் பேசுகையில், புதுமணத் தாம்பதிகள் தங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு உறவினர்களின் அழுத்தம் காரணமாக மீண்டும் ஒருமுறை திருமண விழாவை நடத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலாக அந்த பணத்தை தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் படியும் மண பெண்களிடம் அவர் கூறியிருக்கிறார். தந்தையை இழந்த பெண்களுக்கு இவ்வாறு நடக்கும் சமூகத் திருமணங்கள் வரவேற்கக் கூடிய ஒரு திட்டமாகும். குஜராத் மாநில அரசு இந்த ஒரு திட்டத்தை ஏற்று 500க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது பாராட்டத்தக்கது என்றும் கூறியிருந்தார்.
Input & Image courtesy: Indian Express