800 சதவீதம் அதிகரித்த நகர்ப்புற வீடுகள்.. மோடியின் திட்டத்தால் நடந்தால் அதிசயம்..
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தால் நகர்ப்புற வீடுகள் 800 சதவீதம் அதிகரித்துள்ளன.
By : Bharathi Latha
2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் நகர்ப்புறங்களில் வீடுகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், குறைந்த வருமானம் உடையவர்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை கட்டித்தருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம், மகளிருக்கு அதிகாரமளிப்பதையும் ஊக்குவிக்கிறது. ஏனெனில், இந்த வீடுகள், மகளிரின் பெயரிலோ அல்லது மகளிரும் இணைந்த கூட்டு உரிமையாளர்களின் பெயரிலோ வழங்கப்படுகின்றன.
2004 மற்றும் 2014ம் ஆண்டுகளின் இடையேயான காலக்கட்டத்தில் அரசு திட்டத்தில் 8 லட்சத்து 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. 2015-ம் ஆண்டுக்கு பிறகு 24 மே 2023 வரையிலான காலகட்டத்தில் 74 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2004-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு வீட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அரசு உதவியாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை இரண்டு லட்சத்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், வீட்டு உரிமையாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன், குடிசைப்பகுதிகளை மறுசீரமைக்கவும் வகை செய்கிறது. ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், வேலைவாய்ப்புகளையும் இத்திட்டம் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தால் மக்களின் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவு எளிதாகியுள்ளது.
Input & Image courtesy: News