"PSBB-ன்னா பெயர் போடுவீங்க, கிறுஸ்தவ கல்லூரின்னா பெயர் போட மாட்டீங்களா?" பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய சுமந்த் ராமன்!
By : Kathir Webdesk
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது பட்டமேற்படிப்பு படிக்கும் பல மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து பேராசிரியர் பால் சந்திரமோகன் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரபல தமிழ் செய்தி சேனல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. ஆனால், அந்நிகழ்ச்சி தலைப்பில் சம்பந்தப்பட்ட கல்லூரியின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அந்நிகழ்ச்சியின் தலைப்பு "இன்னோர் பாலியல் தொல்லை.. மாணவிகள் புகாரை அடுத்து தமிழ்த்துறை பேராசியர் பணியிடை நீக்கம், விசாரணை தீவிரம்.." என இருந்தது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மகாலிங்கம் பொன்னுசாமியும் இது குறித்து ட்வீட் செய்து இருந்தார்.
இன்னோர் பாலியல் தொல்லை.. மாணவிகள் புகாரை அடுத்து தமிழ்த்துறை பேராசியர் பணியிடை நீக்கம், விசாரணை தீவிரம்.. #CrimeTime @10 pm @News18TamilNadu @TrichyPolice | @TrichyCityPolic | @tnpoliceoffl pic.twitter.com/lF5JlIt5jr
— Mahalingam Ponnusamy (@mahajournalist) June 30, 2021
இதற்கு பதில் அளித்துள்ள பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், "PSBB-ன்னா பெயர் போடுவீங்க, கிறுஸ்தவ பள்ளி, கல்லூரின்னா பெயர் போட மாட்டீங்களா?" என பத்திரிக்கையாளர் மகாலிங்கத்தை கேள்வி கேட்டு தெறிக்க விட்டார்.
College with no name?There must be a uniform way of reporting such incidents.Either name the Institution or don't. Media never said "a school in Chennai." They said PSBB school case and repeatedly. https://t.co/37GQTHEGIL
— Sumanth Raman (@sumanthraman) June 30, 2021
அட நம்ம சுமந்த் ராமன் கேட்ட கேள்வியும் நியாயம் தானே என தற்போது இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.